ஜம்மு விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி.. ஜம்மு காஷ்மீர் முழுவதும் பவர்கட்!
Pakistan Drone Attack India : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியா 2025, மே 6-7 இரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கி பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அதன் பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதன் பிறகு, 2025, மே 7-8 இரவு, பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க முயன்றது, ஆனால் இந்தியா அதைத் தோற்கடித்தது.

ஜம்முவில் வெடிகுண்டு சத்தம் கேட்ட பிறகு பிறகு ஏர் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. தற்போது ஜம்மு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் மின்தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு சத்தத்திற்குப் பிறகு ஜம்முவில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் 5-6 வெடிச்சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
வானத்தில் ஒரு ட்ரோன் காணப்பட்டதை அடுத்து ஜம்மு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்முவைத் தொடர்ந்து, காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளது. ஆர்.எஸ்.போராவில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இந்தியாவின் S-400 ஏவுகணை பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜம்மு காஷ்மீர் சைரன் சத்தம்
#WATCH | Sirens being heard in Akhnoor, Jammu and Kashmir
More details awaited. pic.twitter.com/eiGdyj14Tq
— ANI (@ANI) May 8, 2025
நடந்தது என்ன?
பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்க ஜம்மு காஷ்மீர் பகுதிகளை தாக்க முயன்றது, ஆனால் பாகிஸ்தான் மீண்டும் தோல்வியடைந்துள்ளது, ஜம்முவில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இருப்பினும், முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஜம்மு முழுவதும் பவர் கட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வலுவான வான்வழித் தாக்குதல் அமைப்பு காரணமாக ஜம்முவில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
உதம்பூர், ஜம்மு, அக்னூர், பதான்கோட் மற்றும் கதுவா ஆகிய இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனுடன், அமிர்தசரஸிலும் மின் தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் குடிமக்கள் தங்கள் வீடுகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்திய ராணுவ தளங்கள் மீது பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சி தோல்வியடைந்தது. 2025, மே 7 மற்றும் 8 ஆம் தேதி இரவு, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள பல முக்கியமான இராணுவ தளங்களை பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் குறிவைக்க முயன்றது, ஆனால் இந்திய ஆயுதப்படைகள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தன.