பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர்.. நாடாளுமன்றத்தில் இன்று முதல் விவாதம்..
Parliament Monsoon Session: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த மோதல் நடவடிக்கைகள் ஆகிய பிரச்சினைகள் குறித்து ஜூலை 28 2025 தேதியான இன்று முதல் விவாதம் தொடங்கப்படுகிறது. மக்களவையில் ஜூலை 28 2025 தேதியான இன்றும், மாநிலங்களவையில் ஜூலை 29 2025 தேதியான நாளையும் விவாதங்கள் தொடங்கப்படுகிறது. இந்த இரண்டு அவைகளிலும் சுமார் 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
டெல்லி, ஜூலை 28, 2025: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2025 ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட்டது. நாடாளுமன்றம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் கடும் அமலில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அலுவல் எதுவும் நடைபெறாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். எனவே இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு ஜூலை 28, 2025 தேதி யான இன்று பஹல்காம் தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மேதல் – இன்று முதல் விவாதம்:
அதாவது பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த மோதல் நடவடிக்கைகள் ஆகிய பிரச்சினைகள் குறித்து ஜூலை 28 2025 தேதியான இன்று முதல் விவாதம் தொடங்கப்படுகிறது. மக்களவையில் ஜூலை 28 2025 தேதியான இன்றும், மாநிலங்களவையில் ஜூலை 29 2025 தேதியான நாளையும் விவாதங்கள் தொடங்கப்படுகிறது. இந்த இரண்டு அவைகளிலும் சுமார் 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவாதங்களை பொறுத்து நேரம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வாரம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த மோதல், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று விவாதம் நடத்தப்படுகிறது. குறிப்பாக இந்த விவாதங்களின் பொழுது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருக்கக்கூடிய மோதலை தடுத்து நிறுத்தியது தான் என அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றை முன்வைத்து கேள்விகள் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க: ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. 8 மசோதாக்கல் நிறைவேற்ற திட்டம்..
விவாதங்களில் களமிறங்கும் முக்கிய அமைச்சர்கள்:
இந்நிலையில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இதில் பங்கு பெற்று விவாதங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி.. இந்திய இராணுவம் பலம் குறித்து பேசிய பிரதமர் மோடி!
அதேபோல் எதிர்க்கட்சிகள் தரப்பில் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கேள்விகளை எழுப்புவார்கள் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இடதுசாரியை சேர்ந்த ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட தலைவர்களும் இதில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எடுத்து அடுத்த மூன்று நாட்களும் அவை நடவடிக்கைகளில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க காங்கிரஸ் கொரோனா உத்தரவிட்டுள்ளார்