அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி
PM Narendra Modi about Pakistan : ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுடன் நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது பாகிஸ்தானுடனான தாக்குதல் முடிவுக்கு வரவில்லை எனவும் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் பதிலடி உக்கிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதல்களுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் (Pakistan) இடையே மே 7 முதல் 10, 2025 வரை, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக எல்லைப் பகுதிகளில் பெரும் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த இந்தியா அதற்கு பதிலடி கொடுத்து வந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பல்வேறு பயங்கரவாத முகாம்களை நோக்கி பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் அமெரிக்கா தலையிட்டு சமரச முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக, மே 10, 2025 அன்று இருநாடுகளும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் மெல்ல இரு நாடுகளுக்கு இடையே அமைதி பரவ தொடங்கியது. இந்த நிலையில் மே 12, 2025 அன்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது
Address to the nation. https://t.co/iKjEJvlciR
— Narendra Modi (@narendramodi) May 12, 2025
- பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றித்தான் இருக்கும்.
- நாட்டின் ஆயுதப் படைகளுக்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்துகிறேன். நாட்டின் ஒற்றுமைக்கு நான் தலை வணங்குகிறேன்.
- பாகிஸ்தான் ராணுவமும் அரசாங்கமும் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றன, அது ஒரு நாள் பாகிஸ்தானையே அழித்துவிடும்.
- பாகிஸ்தானின் பகவல்பூர் பயங்கரவாதிகளின் பல்கலைக்கழகமாக உள்ளது.
- பாகிஸ்தான் உயிர்வாழ விரும்பினால், அது பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க வேண்டும். இதைத் தவிர அமைதிக்கு வேறு வழியில்லை.
- பயங்கரவாதமும் பேச்சும் ஒன்றாகச் செல்ல முடியாது. பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாகச் செல்ல முடியாது. தண்ணீரும் இரத்தமும் கூட ஒன்றாகப் பாய முடியாது.
- இனி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்றால் இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும்
- பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன முடிவுக்கு வந்துவிடவில்லை
- இந்தியாவின் ஏவுகணைகள் பாகிஸ்தானில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. நமது விமானப்படை, கடற்படை, எல்லை பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து தாக்குதல் செய்தனர்.
- இந்தியா தாக்குதலை நிறுத்த வேண்டுமென பாகிஸ்தான் ராணுவம் முறையிட்டது.
- பயங்கரவாதத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவினார்கள்.
- நமது நாட்டு கோவில்கள் குருத்துவாரர்கள் மசூதிகள் மீது கூட பாகிஸ்தான் தாக்குதல் நடத்த போராடியது
- பாகிஸ்தானின் ட்ரோன்களை சீட்டுக்கட்டுகளை போல இந்தியா பாதுகாப்புப்படை வீழ்த்தியது
- பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பாகிஸ்தான். மாறாக இந்தியா மீது தாக்குதல் நடத்தியது
- இந்த வெற்றி நாட்டின் மகளிருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.