ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் மீண்டும் பறந்த ட்ரோன்களால் பரபரப்பு – 48 மணி நேரத்தில் இரண்டாவது முறை
Drone Intrusion Reported: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் மீண்டும் பறந்த ட்ரோன்களால் பரபரப்பு ஏற்பட்டது. 48 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக கேரி செக்டரில் ட்ரோன்கள் காணப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கேரி செக்டர் பகுதியில், சந்தேகத்திற்கிடமான ட்ரோன் நடமாட்டம் மீண்டும் பதிவாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஜம்மு காஷ்மீர் (Kashmir) எல்லைப் பகுதியில் மீண்டும் பறந்த டிரோன்களால் பரபரப்பு ஏற்பட்டது. 48 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக கேரி செக்டரில் டிரோன்கள் (Drone) காணப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கேரி செக்டர் பகுதியில், சந்தேகத்திற்கிடமான டிரோன் நடமாட்டம் மீண்டும் பதிவாகியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் இது இரண்டாவது முறை என பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், வானில் பறந்த டிரோன்களை கண்டறிந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அந்த பகுதியில் தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பறந்த டிரோன்களால் பரபரப்பு
ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கேரி செக்டர் பகுதியில், நிறைய டிரோன்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் வானில் பறந்ததை கண்டதும், ராணுவத்தினர் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி அவற்றை வீழ்த்த முயன்றனர். இதனையடுத்து, ட்ரோன்கள் மூலம் ஏதேனும் ஆயுதங்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, அந்த பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதையும் படிக்க : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C- 62 ராக்கெட்.. விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்..
48 மணி நேரத்தில் இரண்டாவது முறை
கடந்த 48 மணி நேரத்தில் கேரி செக்டரில் இது இரண்டாவது சம்பவம் என்பதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினர் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் சம்பவத்துக்கு பிறகு, குறுகிய காலத்திற்குள் எல்ஒசி மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பல ட்ரோன்கள் கண்டறியப்பட்டுள்ளதால் மீண்டும் போர் சூழல் உருவாகுமா என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க : ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி
இதற்கு முன்பு, கடந்த ஜனவரி 11, 2026 ஞாயிற்றுக்கிழமை ராஜௌரி மாவட்டத்தில் பல டிரோன்கள் பறந்ததாக தகவல் வெளியானது. அதில் ஒன்று, சம்பா மாவட்டத்தின் ராம்கர் செக்டர் பகுதியின் மீது சில நிமிடங்கள் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பாக நவ்ஷேரா, பூஞ்ச் மற்றும் சம்பா பகுதிகளிலும் இதேபோன்ற டிரோன் நடமாட்டங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை கடத்துவதற்கான தீவிரவாத முயற்சிகள் நடக்கிறதா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.