வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C- 62 ராக்கெட்.. விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்..
இதன் மூலம் மண்ணின் ஈரப்பதம், காடுகளின் அடர்த்தி மற்றும் நிலத்தடியில் மறைந்திருக்கும் உண்மைகளை அதன் தனித்துவமான டிஜிட்டல் கையெழுத்து மூலம் கண்டறிய முடியும். இதில், சென்னையைச் சேர்ந்த விண்வெளி துறை, ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆர்பிட்எய்டு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஆயுள்சாட் செயற்கைக்கோளும் ஒன்றாகும்.
ஆந்திரா, ஜனவரி 12: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி சி- 62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது 2026ம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கப்பட்ட நிலையில், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் பாய்ந்தது PSLV C- 62 ராக்கெட்:
#WATCH | Sriharikota, Andhra Pradesh: The PSLV-C62/EOS-N1 mission launches from Satish Dhawan Space Centre (SDSC-SHAR).
PSLV-C62 will carry EOS-N1 and 15 co-passenger satellites. EOS-N1 and 14 co-passengers are planned for injection into Sun Synchronous Orbit; the KID capsule is… pic.twitter.com/b4mrfQMTM2
— ANI (@ANI) January 12, 2026
இந்த ராக்கெட் மூலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய இஓஎஸ் என்-1 (EOS-N1)என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், வெறும் படங்களை எடுக்கும் சாதாரண கருவி அல்ல.
‘ஸ்பேஸ் இன்டெலிஜென்ஸ்’:
இது ‘ஸ்பேஸ் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் விண்வெளி உளவுத் திறனை இந்தியாவிற்கு வழங்கப்போகிறது. இது சாதாரண கேமராக்களைப் போல வண்ணங்களை மட்டும் பார்க்காமல், ஒளியின் நூற்றுக்கணக்கான நிழல்களை பகுப்பாய்வு செய்து பூமியின் நிலப்பரப்பு குறித்த துல்லியமான அறிக்கையைத் தயார் செய்யும்.
இதன் மூலம் மண்ணின் ஈரப்பதம், காடுகளின் அடர்த்தி மற்றும் நிலத்தடியில் மறைந்திருக்கும் உண்மைகளை அதன் தனித்துவமான டிஜிட்டல் கையெழுத்து மூலம் கண்டறிய முடியும்.இதில், சென்னையைச் சேர்ந்த விண்வெளி துறை, ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆர்பிட்எய்டு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஆயுள்சாட் செயற்கைக்கோளும் ஒன்றாகும்.
17 செயற்கைக்கோளுடன் ஏவப்பட்டது:
இந்த நிறுவனம் புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோளுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பும் தீர்வுகளுடன், விண்வெளியில் எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இதனுடன் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.
PSLV C- 61 ராக்கெட் தோல்வி:
முன்னதாக, கடந்த 2025 மே மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV C- 61 ராக்கெட் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட்டிலும் 1,696.24 கிலோ எடை கொண்ட இஒஎஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. அது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாக இருக்கும் என எதிர்பார்கப்பட்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.