பெண்களின் உள்ளாடைகளை திருடி வந்தவர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்!

Man Arrested For Stealing Women's Under Garments | கர்நாடகா மாநிலம், பெங்களூரு பகுதியில் வீட்டிற்கு வெளியே காயவைக்கப்படும் பெண்களின் உள்ளாடைகளை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது வீட்டை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெண்களின் உள்ளாடைகளை  திருடி வந்தவர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Jan 2026 17:25 PM

 IST

பெங்களூரு, ஜனவரி 21 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) நகரில் உள்ள ஹெப்பகோதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அமல். இவர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டங்களில் முன்பு காயவைக்கப்படும் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அவ்வாறு பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்வது மட்டுமன்றி, அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது உடலில் அணிந்தும் பார்த்துள்ளார். அதுமட்டுமன்றி, அந்த உள்ளாடைகளை அணிந்தபடி செஃல்பி மற்றும் வீடியோக்களையும் அவர் எடுத்துள்ளார்.

தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார்

இவ்வாறு மர்ம நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்வது தொடர்பான தகவல் ரீல்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அமலை கைது செய்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பெண்களின் உள்ளாடைகளை திருடி, அவற்றை அணிந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : ரூ.6 கோடி மதிப்பிலான 6.5 மி.லி. கொடிய பாம்பு விஷம் பறிமுதல்.. 7 பேர் அதிரடியாக கைது..

வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீசாருக்கு ஷாக்

அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது வீடு முழுவதும் அமல், ஏராளமான பெண்களின் உள்ளாடைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்த மொத்த உள்ளாடைகளையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : டெல்லியில் குடியரசு தின விழா.. தேனி பழங்குடித் தம்பதியினருக்கு அழைப்பு.. ஏன் தெரியுமா?

கைது செய்யப்பட்ட அந்த நபர் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories
கணவன் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்ததால் ஆத்திரம்.. 1 வயது பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய்!
குடியரசு தின விழாவில் CRPF ஆண்கள் பிரிவை வழிநடத்தப்போகும் பெண் கமாண்டன்ட்.. யார் இந்த சிம்ரன் பாலா?
போட்டி போட்டுக்கொண்டு 19 பீர் குடித்த இளைஞர்கள்.. மயங்கி விழுந்து பரிதாப பலி!
இந்தியர் போல கையால் பிரியாணி சாப்பிட்ட ஜப்பான் தூதர்…சுவை இன்னும் அதிகமாக இருப்பதாக நெகிழ்ச்சி!
பட்ஜெட் 2026: எப்போது தாக்கல் செய்யப்படும்? பொருளாதார ஆய்வு அட்டவணை.. எப்படி நேரலையில் பார்ப்பது? முழு விவரம் இதோ..
1,500 கி.மீ. இலக்கை தாக்கும் ராட்சசன்… குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஏவுகணை… என்ன ஸ்பெஷல்?
இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?