லின் இன் பார்ட்னரை கொன்ற பெண்… ரூ.7 லட்சத்துடன் தப்பியோட்டம்.. நடந்தது என்ன?
Haryana Crime News : ஹரியானாவில் லிவ் இன் பார்ட்னரை, இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் தொடர்ந்து பேசியதால், ஆத்திரத்தில் லிவ் இன் பார்ட்னரை, இளம்பெண் கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிரிப்படம்
ஹரியானா, ஆகஸ்ட் 03 : ஹரியானா மாநிலம் குருகிராமில் லிவ் இன் உறவில் இருந்த காதலனை, பெண் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனை கொலை செய்தபிறகு, ரூ.7 லட்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதும் தெரியவந்துள்ளது. குருகிராமில் உள்ள பலியாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் சர்மா. அதே பகுதியைச் சேர்ந்த பெண் யஷ்மீத் கவுர் (27). இருவரும் குருகிராமில் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்தனர். ஹரிஷ் சர்மாவுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் அவரது மனைவியுடன் கிராமத்தில் வசித்து வந்தனர். அவரது மனைவி சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்த நேரத்தில்., ஹரிஷ் சர்மா மற்றும் யஷ்மீத் கவுர் இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில், நாளடைவில் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இதற்கிடையில், இருவரும் குரகிராமில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதற்கிடையில், அவ்வப்போது, ஹரிஷ் சர்மா அவரது மனைவியுடன் பேசி வந்துள்ளார். இது யஷ்மீத் கவுருக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. மனைவியுடன் பேசுவதை நிறுத்த வேண்டும் என பலமுறை கூறியிருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு, சர்மா தனது மனைவியுன் போனில் பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
Also Read : லக்கேஜ் ஏன் அதிகமா இருக்கு? விமான ஊழியர்களை அட்டாக் செய்த ராணுவ அதிகாரி.. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு
லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த பெண்
இதனை அறிந்த யஷ்மீத், மீண்டும் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் சர்மாவை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் நண்பரான விஜய் என்கிற சேதி என்பவரும் மற்றொரு அறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Also Read : இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. 25 சவரன் நகையை பறிகொடுத்த பெண்..
இதற்கிடையில், கவுர் மற்றும் விஜய் இருவரும் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறினார். மேலும், சர்மாவை கொலை செய்துவிட்டு ரூ.7 லட்சத்துடன் யஷ்ரீத் டெல்லிக்கு சென்றிருக்கிறார். டெல்லியின் அசோக் நகரில் வசிக்கும் யஷ்மீத் கவுர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லிவ் இன் பார்ட்னரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.