ஆசிரியை-யை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவர்.. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்!
Teacher Set Ablaze by Student | மத்திய பிரதேசத்தில் 18 வயது மாணவன் 26 வயது ஆசிரியை-யை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவனை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

குற்றம் செய்த மாணவர்
போபால், ஆகஸ்ட் 20 : மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) 26 வயது ஆசிரியை-யை 18 வயது மாணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை மீது மாணவனுக்கு இருந்த ஈர்ப்பு மற்றும் முன்பகை காரணமாக அவர் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவனை கைது செய்து போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியை-யை மாணவர் தீ வைத்து கொளுத்தியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆசிரியை -யை உயிருடன் தீ வைத்து கொளுத்திய மாணவர் – அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 18 வயதான சூர்யான்ஷ். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரை தீவைத்து கொளுத்தியுள்ளார். ஆகஸ்ட் 18, 2025 அன்று சரியாக 3 மணி அளவில் ஆசிரியை வீட்டுக்கு பெட்ரோல் உடன் சென்ற மாணவர் எதுவும் பேசாமல் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஆசிரியையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதன் காரணமாக ஆசிரியை மீது தீ பரவிய நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 10 முதல் 15 சதவீத தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ஆசிரியையின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : கிரைம் திரில்லர் வெப் சீரீஸ் பார்த்து ஸ்கெட்ச்.. ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!
ஆசிரியை-யை மாணவர் தீ வைத்து கொளுத்தியது ஏன்
பாதிக்கப்பட்ட அசிரியைக்கும் அந்த மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர் ஆசிரியை மீது ஈர்ப்பை உணர்ந்துள்ளார். அந்த மாணவர் வேறுறொரு பள்ளியில் படித்து வந்த நிலையில், அவர் மீது எழுந்த புகார்கள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 15, 2025 அன்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாணவர் அந்த ஆசிரியை-யை பார்த்து தகாத கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நடுவழியிலேயே சிக்கிய மோனோ ரயில்.. 100 பயணிகளின் கதி என்ன? மும்பையில் நடந்த சம்பவம்
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக ஆசிரியை மீது இருந்த ஈர்ப்பு மற்றும் புகார் அளித்ததால் எழுந்த கோபம் ஆகியவற்றின் காரணமாக அந்த மாணவர் ஆசிரியை-யை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த மாணவரை காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.