முகத்தில் இருந்த கரும்புள்ளிகள்.. தான் அழகாக இல்லை என நினைத்து பெண் விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்!
Woman Killed Herself for Dark Spots | கர்நாடகாவில் தனது முகத்தில் அதிக அளவு கரும்புள்ளிகள் இருந்ததால் தான் அழகாக இல்லை என நினைத்து பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, செப்டம்பர் 28 : கர்நாடகாவில் (Karnataka) முகத்தில் அதிக அளவு கரும்புள்ளிகள் இருந்ததால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் காரணமாக தான் அழகாக இல்லை என்று நீண்ட நாட்கள் விரக்தியில் இருந்து வந்த அந்த பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், கரும்புள்ளிகள் காரணமாக பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் – பெண் எடுத்த விபரீத முடிவு
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் நரகேல் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி. 34 வயதான இவர் தனக்கு முகத்தில் அதிக அளவு கரும்புள்ளிகள் இருப்பதால் கடந்த பல நாட்களாகவே கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார். அதாவது தான் அழகாக இல்லை என நினைத்து அவர் பல நாட்களாக எங்கும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்துள்ளார். தான் அழகாக இல்லை என்ற எண்ணம் ஹேமாவுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவே அவரை மிக கடுமையான மன அழுத்தத்தில் தள்ளியுள்ளது.
இதையும் படிங்க : ஐயோ.. கொதிக்கும் பாலில் தவறி விழுந்த குழந்தை.. பறிபோன பிஞ்சு உயிர்!
வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துக்கொண்ட பெண்
சம்பவத்தன்று கணவர் வேலைக்கு சென்ற பிறகு ஹேமா வீட்டு வேலைகளை செய்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் சமையலறையின் வாசலில் இருந்த கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : இளைஞர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பகீர் சம்பவம்!
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹேமாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெளிவான முகம் தான் அழகு என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் தான் முகத்தில் கரும் புள்ளிகள் இருந்ததால் தான் அழகாக இல்லை என நினைத்து பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.