பாராசிட்டாமல் உள்ளிட்ட 15 மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு தடை.. கர்நாடகா அரசு நடவடிக்கை!

Karnataka Government Bans 15 Medicines | பாராசிட்டாமல் 650 உள்ளிட்ட 15 மருந்து மற்றும் மாத்திரைகளை தடை செய்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்துகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதார துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பாராசிட்டாமல் உள்ளிட்ட 15 மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு தடை.. கர்நாடகா அரசு நடவடிக்கை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Jun 2025 08:52 AM

 IST

பெங்களூரு, ஜூன் 27 : கர்நாடகாவில் (Karnataka) பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிட்டமல் (Paracetamol) உள்ளிட்ட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடகாவில் நடத்தப்பட்ட மாநில மருந்து பரிசோதனை கூட்டத்தின் ஆய்வில் சில மருந்து மற்றும் மாத்திரைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாராசிட்டமல் உள்ளிட்ட 15 மருந்து மற்றும் மாத்திரைகள் தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, எந்த எந்த மருந்து மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

15 மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதித்த கர்நாடகா அரசு

உடல்நல பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அருகில் உள்ள மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். அவவாறு பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகளில் ஒன்றுதான் பாராசிட்டாமல். இவ்வாறு ஏராளமான மக்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தும் நிலையில், பாராசிட்டாமல் 650 உள்ளிட்ட 15 மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது.

மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதிக்க என்ன காரணம்

உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதால் நடவடிக்கை – சுகாதார துறை அமைச்சர்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில சுகாதார துறை அமைச்சர் குண்டு ராவ், தடை செய்யப்பட்ட இந்த மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த மருந்துகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..