பெண் ஊழியர்களுடன் ஆபாச செயல்களில் ஈடுபட்ட கர்நாடகா டிஜிபி.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோக்கள்!
Karnataka DGP Videos | கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் டிஜிபி ஒருவர் தனது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் ஆபாச செயல்களில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்து வருகிறது.

வைரல் வீடியோ
பெங்களூரு, ஜனவரி 20 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) பகுதியில் டிஜிபி அந்தஸ்து உடைய ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்துக்கொள்வது தொடர்பாவ வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடத்துக்கொண்ட ஐபிஎஸ் அதிகாரி
கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அம்லாக்க இயக்குநகரத்தின் டிஜிபியாக உள்ளவர் ராம்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில் பணி நேரத்தின் போது அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனை யாரோ அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க : பேருந்தில் பாலியல் சீண்டல் செய்ததாக வீடியோ வெளியிட்ட பெண்.. குற்றம்சாட்டப்பட்ட நபர் விபரீதம்!
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோக்கள்
Utterly disgusting behaviour of Karnataka DGP
I am wondering who is recording the video though? Could it be the woman cosying up in order to blackmail later ? pic.twitter.com/MpHgE9Tss6
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) January 19, 2026
இந்த வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ராமச்சந்திர ராவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், நான் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு, பெலகாவி மண்டல ஐஜியாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அந்த பழைய வீடியோக்களை யாரோ வெளியிட்டுள்ளனர் என்று கூறியுனார்.
இதையும் படிங்க : 3 ஆண்களுடன் கள்ளக்காதல்.. திட்டமிட்டு மனைவியை கொலை செய்த கணவர்.. பகீர் பின்னணி!
யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் – ராமச்சந்திர ராவ்
முன்னதாக அந்த வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என கூறிய அவர், மீண்டும் அந்த வீடியோக்கள் உண்மை இல்லை. அவை போலி வீடியோக்கள். யாரோ சதி செய்து இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அது குறித்து சட்ட ரீதியாக செயல்பட உள்ளதாக கூறியுள்ளார். இவ்வாறு சர்ச்சைக்குள்ளான காவல்துறை அதிகாரி மாறி மாறி கூறியிருப்பது இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.