ஜம்மு காஷ்மீரில் கனமழை … நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழப்பு

J&K Landslide Disaster: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 26, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கனமழை ... நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு

Published: 

26 Aug 2025 20:31 PM

 IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டோடா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வைஷ்ணாதேவி ஆலயத்திற்கு பதயாத்திரை சென்ற பக்தர்கள் 6 பேர் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை கடும் சேதமைடந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வைஷ்ணாதேவி யாத்திரை நிறுத்தம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அத்குவாரி அருகே இந்திரபிரஸ்த போஜனாலயா  பகுதியில் ஆகஸ்ட் 26, 2025 அன்று அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் 5 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் அடங்குவர். இந்த நிலையில் வைஷ்ணாதேவி ஆலயம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியான நிலையில், கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : ஜம்முவில் கனமழை.. பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் வெள்ள எச்சரிக்கை விடுத்த இந்தியா..!

சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணமாக பெரும் சேதம் அடைந்துள்ளன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் ஆற்றங்கரையில் செல்ல வேண்டாம் எனவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முதல்வர் ஓமர் அப்துல்லா பதிவு

 

இதையும் படிக்க : 2 மாத குழந்தைக்கு அவசர தடுப்பூசி… உயிரைப் பணயம் வைத்து நர்ஸ் செய்த சம்பவம்.. குவியும் பாராட்டு!

நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து கடும் பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் நிலச்சரிவு காரணமாக அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்ப்டடுள்ளது. டோடா – கிஷ்துவார் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்லது. சிந்தன் டாப் மலைவாசல் மற்றும் சோஜிலா பாஸ் சாலை நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளது. ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ரம்பான் பகுதியில் மலையில் இருந்து கற்கள் விழுவதால் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  தாவி நதி மற்றும் ரவி நதி அபாய நிலையைத் தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. குறிப்பாக கத்துவா மாவட்டத்தில் ரவி ஆறு கரையைத் தாண்டி வெள்ளம் ஓடுவதால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

முதல்வர் ஓமர் அப்துல்லா விளக்கம் 

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா இதுகுறித்து கூறியதாவது, ஜம்முவில் உள்ள பல பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு பகுதிகளுக்கு சென்று நிலைமையை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பேன். தற்போது உடனடி நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பாதிக்கப்பட்ட இடத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.