ஐடி நிறுவன CEO பிறந்த நாள் கொண்டாட்டம்.. பெண் மேலாளரை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. பகீர் சம்பவம்!
Manager Assaulted By Her Company CEO | ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் பகுதியில் ஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பெண் மேலாளரை அந்த நிறுவன சிஇஓ மற்றும் மற்றொரு ஊழியர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இடது பக்கத்தில் இருப்பவர்கள் பெண் மேலாளரை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்
உதய்பூர், டிசம்பர் 27 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம், உதய்பூரில் (Udaipur) உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய ஜிதேஷ் சிசோடியா என்ற நபர் தனது பிறந்த நாளுக்காக விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பங்கேற்றனர். அந்த வகையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் மேலாளர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.
காரில் லிஃப்ட் கொடுப்பதாக அழைத்த பெண் அதிகாரி
நள்ளிரவு நடைபெற்ற இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுபானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு திரும்பவதற்காக தயாராகியுள்ளனர். அப்போது நிகழ்ச்சியில் இருந்த பெண் மேலாளருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவர் காரில் லிஃப்ட் தருவதாக கூறியுள்ளார். அந்த காரில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா மற்றும் அந்த பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க : 10 பேரை பலி கொண்ட கோர விபத்து…சம்பவ இடத்தில் கேட்ட மரண ஓலம்…பேருந்து ஓட்டுநர் பரபரப்பு தகவல்!
மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல்
நான்கு பேரும் காரில் சென்றுக்கொண்டு இருந்தபோது, பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா மற்றும் சரோஹி ஆகியோர் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை அவரது வீட்டில் இறக்கி விட்டுள்ளனர். மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் மேலாளர், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தெரிய வந்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : அசாமில் தொடரும் வன்முறை…இருவர் பலி…பதற்றம் அதிகரிப்பு!
காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் மேலாளர்
இந்த நிலையில் உடனடியாக அவர் தனது வீட்டின் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை காரில் அழைத்துச் சென்றபோது சிகிரெட் போன்ற பொருளை வாங்கி கொடுத்ததாகவும், அதற்கு பிறகு தான் மயக்கமடைந்த நிலையில் அந்த இருவரும் தன்னை பாலியல் வவ்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
3 பேரை கைது செய்த போலீஸ்
இந்த விவகாரம் தொடர்பாக பெண் மேலாளர் அளித்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் உயர் அதிகாரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.