1,000 உயரம், 55 மீட்டர் நீளம்.. இந்தியாவின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் திறப்பு!
India's Largest Glass Walkaway In Visakhapatnam | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கண்ணாடி பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விசாகப்பட்டினம் கண்ணாடி பாலம்
விசாகப்பட்டினம், டிசம்பர் 03 : ஆந்திர மாநிலம் (Andhra Pradesh), விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் (India’s Largest Glass Walkaway) திறக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அது திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக நீளமான கண்ணாடி பாலம் என்று பெருமையை இது பெற்றுள்ள நிலையில், இந்த பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு
இந்தியாவின் இந்த மீக நீளமான கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசர்கிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் சுமார் 55 மீட்டர் நீளத்தில் கான்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு ஜெர்மனியில் இருந்து கண்ணாடிகள் வரவழைக்கப்பட்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு மொத்தம் ரூ.7 கோடி செலவாகியுள்ளது.
இதையும் படிங்க : அதிவேக ஆம்புலன்ஸ்… குறுக்கே வந்த யானை.. கேரளாவில் திக் திக் சம்பவம்!
புயல் மற்றும் சூறாவளி காற்றை தாங்க கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது
🌉✨ VIZAG IS ABOUT TO TOUCH THE SKY!
🚨 India’s LONGEST Glass Bridge opens on December 1 at Kailasagiri and it looks absolutely stunning! 😍🔥
👣 Walk above the city on a crystal-clear glass deck
🌊 Soak in the Bay of Bengal from a whole new angle
🌆 Skyline views that will… pic.twitter.com/EMtj8A380k— Andhra Community (@AndhraCommunity) November 30, 2025
இந்த பாலம் 40 மி.மீ தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்ணாடி, 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு ஆகியவற்றை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தின் அமைப்பு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் புயல் மற்றும் சூறாவளி காற்றை தாங்க கூடியது.
இதையும் படிங்க : குவைத்தில் இருந்து ஐதராபாத் வர இருந்த இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு சம்பவம்!
இந்த கண்ணாடி பாலம் தினமும் காலை 8 மணி முதல் 9 வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் 15 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தை காண அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.