1,500 கி.மீ. இலக்கை தாக்கும் ராட்சசன்… குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஏவுகணை… என்ன ஸ்பெஷல்?

Hypersonic Glide Missile : டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்திய கடற்படையின் ஹைபர்சோனிக் கிளைடு ஏவுகணை அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. இந்த ஏவுகணையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளன. இது தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

1,500 கி.மீ. இலக்கை தாக்கும் ராட்சசன்… குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஏவுகணை… என்ன ஸ்பெஷல்?

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ஹெபர்சோனிக் கிளைடு ஏவுகணை

Updated On: 

21 Jan 2026 10:02 AM

 IST

புது டெல்லியில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி ( திங்கள்கிழமை) குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, இந்திய கடற்படை ஆகிய முப்படைகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை, இந்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவ படைகள் மற்றும் போலீசாரின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும். இதே போல, பாதுகாப்பு படைகளின் ஆயுதங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக அணிவகுத்து செல்லும். அதன்படி, இந்த ஆண்டின் 77- ஆவது குடியரசு தின விழா அணி வகுப்பில் முதல் முறையாக இந்திய ராணுவத்தின் விலங்குகள் படை பிரிவும் இடம் பெற உள்ளது. இதே போல, அதிவேகமாக பயணிக்க கூடிய பிரம்மாண்ட ஏவுகணையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

அதிவேகம் பயணிக்கும் ஹெபர்சோனிக் கிளைடு ஏவுகணை

அதன்படி, டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) தயார் செய்த அதிக தொலைவு சென்று தாக்கக்கூடிய ஹைபர்சோனிக் கிளைடு (HYBERSONIC GLIDE) ஏவுகணை அணி வகுப்பில் இடம் பெற உள்ளது. இந்த ஏவுகணையானது ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்று எதிரியின் ரேடார்களுக்கு சிக்காமல் 1,500 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணித்து இலக்கை தாக்கி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பட்ஜெட் 2026: PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாற்றம்.. உதவித்தொகை ரூ.11,800 ஆக உயர்வு?”

கடற்படையின் தேவைக்காக உருவாக்கப்பட்டது

இது தொடர்பாக டிஆர்டிஓ திட்ட இயக்குநர் ஏ. பிரசாத் கவுட் கூறுகையில், டிஆர்டிஓ-வின் ஹைப்பர்சோனிக் கிளைடு ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை தொழில் நுட்பங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த ஏவுகணை இந்திய கடற்படையின் தேவைகளுக்காக டிஆர்டிஓவால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை நன்மை என்னவென்றால், இது ஹைப்பர்சோனிக் என்பதால் எதிரி ரேடார்கள் இதை கண்டறிய முடியாது. இதன் தூரம் சுமார் 1,500 கி.மீ. ஆகும்.

ஏவுகணை தொழில்நுட்பம்

மேலும், இது பல்வேறு பேலோடுகளை சுமந்து சென்று, பின்னர் கடலில் நிலை நிறுத்தப்பட்ட கப்பல்களில் உள்ள போர் முனைகளைத் தோற்கடிக்க முடியும். இது ஹைப்பர்சோனிக் வேகத்திலும் அதிக காற்றியக்கத் திறனிலும் பயணிக்கிறது. இது கடல் நீரில் இந்தியாவின் திறனை அதிகரிக்கும். டிஆர்டிஓ ஹைப்பர்சோனிக் கிளைடு ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது.  மேலும், ஏராளமான வெடிபொருட்களை சுமந்து சென்று கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள எதிரிகளின் இலக்குகளை துள்ளியமாக தாக்கி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் திறன்களை அதிகரிக்கும் என்று திட்ட இயக்குநர் கவுட் கூறினார்.

மேலும் படிக்க: கர்த்தவ்யா பாதை குடியரசு தின பேரணி.. 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு!

ரயில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?
இந்தியாவில் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் - இதில் என்ன சிறப்புகள்?
இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம்…6 நடைமேடைகள். எங்கே தெரியுமா?
37 அண்டுகள் ஆணாக வாழ்ந்த பேச்சியம்மாள்.. யார் இவர்? காரணம் என்ன?