கொட்டும் பனியில் பிரச வலியில் தவித்த கர்ப்பிணி.. தோலில் சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்!

Indian Army Soldiers Rescued Pregnant Woman | ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவில் பிரச வலியில் சிக்கி தவித்த இளம் பெண்ணை ராணுவ வீரர்கள் தோலில் சுமந்து சென்று காப்பாற்றிய சம்பவத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கொட்டும் பனியில் பிரச வலியில் தவித்த கர்ப்பிணி.. தோலில் சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்!

கர்ப்பிணியை தோலில் தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள்

Published: 

11 Feb 2026 12:59 PM

 IST

ஜம்மு & காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரில் (Jammu and Kashmir) கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், கொட்டும் பணியில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் உயிரை இந்திய ராணுவ வீரர்கள் (Indian Army Soldiers) காப்பாற்றியது இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பிரசவ வலியால் துடித்த அந்த பெண்ணை ராணுவ வீரர்கள் தோலில் தூக்கிச் சென்று காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கொட்டும் பனியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்தார் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 2 முதல் 3 அடி வரை பனி பெய்த நிலையில், அங்கு சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு சில முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு போக்குவரத்துக்கு வழி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழலில் 26 வயது கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 3 திருமணம், 5 குழந்தைகள், ரூ.2 கோடி கடன்.. மூன்று சகோதரிகள் தற்கொலை வழக்கில் வெளியான முக்கிய தகவல்கள்!

ராணுவ முகாமை தொடர்புக்கொண்டு உதவி கேட்ட நபர்

இந்த நிலையில் சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழி தெரியாமல் அந்த பெண்ணின் கணவர் தவித்துள்ளார். அப்போது அவர் அவசர உதவிக்காக அருகில் உள்ள வில்காம் ராணுவ முகாமை தொடர்புக்கொண்டு நிலவரத்தை கூறி அவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க : 50 ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை திருடிய வழக்கில் 65 வயது முதியவர் கைது.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!

கர்ப்பிணியை தோலில் சுமந்துச் சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்

தகவல் கிடைத்த நிலையில், ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அந்த கர்ப்பிணையை ஸ்டிரெச்சரில் வைத்து முழங்கால் அளவு இருந்த பணியில் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர்கள் அந்த கர்ப்பிணியை தோலில் வைத்து சுமந்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் வரக்கூடிய சாலைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், கர்ப்பிணியை காப்பாற்றிய ராணுவ அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கால்வாயில் விழுந்த கார்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..
வெளியான ‘கூஸ்கோர் பண்டிட்’ டீசர்.. வலுக்கும் சர்ச்சை..
நார்தர்ன் லைட்ஸைக் காண சிறப்பு இரவு ரயிலை உருவாக்கிய நார்வே!
திருமண நாளைக் கொண்டாட காத்திருந்த கேக்; டெல்லியில் விபத்தில் உயிரிழந்த இளைஞர்