Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குறையும் பிறப்பு விகிதம்.. மக்கள் தொகை குறித்து ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

India Population : இந்தியாவின் மக்கள் தொகை 146.39 கோடியை எட்டி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் பிறந்து விகிதம் குறைந்து வருவதாகவும், இதனால் முதியவர்களின் எண்ணிக்கை உயரும் என ஐ.நா ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 1960ல் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள் இருந்த நிலையில், தற்போது 2 ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குறையும் பிறப்பு விகிதம்.. மக்கள் தொகை குறித்து ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
மக்கள் தொகைImage Source: Pixabay/x
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2025 11:28 AM

டெல்லி, ஜூன் 11 : இந்திய மக்கள் தொகை (india population) 146.39 கோடியை எட்டி உள்ளதாக ஐ.நா அறிக்கையில் (UN Report) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் குழந்தை பிறப்பு (Fertility rates) விகிதம் குறைந்துள்ளதாக கூறியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை உலக மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மொத்த மக்கள் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 146.39 கோடியை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 0 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 24 சதவீதம் பேரும், 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 17 சதவீதம் பேரும், 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் 26 சதவீத பேரும் உள்ளனர். நாட்டின் 68 சதவீத மக்கள் தொகையில் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் வேலையில் உள்ளனர்.

நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

இந்து செய்தி  வெளியிட்ட தகவலின்படி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 7 சதவீதம் பேர் உள்ளனர். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி பிறகும் ஆண்களுக்கு 71 ஆண்டுகள் ஆயுட் காலமும், பெண்களுக்கு 74 ஆண்டுகள் ஆயுட் காலமும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.

தற்போது 150 கோடி மக்கள் கொண்டுள்ள நிலையில், அடுத்த 40 ஆண்டுகளில் 170 கோடியாக உயரும் என ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதே நேரத்தில், நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.9  விகிதம் என்ற  அளவில் குறைந்துள்ளது.

பிறப்பு விகிதம் குறைவு

மகப்பேறு விகிதம் 2.1 ஆக குறைவாக இருக்கும்போது, அடுத்த தலைமுறையில் மக்கள் எண்ணிக்கை குறைந்து, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும். 1960 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 436 மில்லியனாக இருந்தபோது, ​​சராசரி பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஆறு குழந்தைகள் இருந்தன. இந்தியாவில் சராசரி பெண்ணுக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து UNFPA இந்திய பிரதிநிதி ஆண்ட்ரியா வோஜ்னர் கூறுகையில், ”
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. 1970ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஐந்து குழந்தைகள் இருந்தது. இப்போது, ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

தற்போது பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து சுயமாக முடிவு எடுக்கும் சுதந்திரத்தை பெற்றுள்ளனர். இதன் மூலம் மகப்பேறு இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்” என்றார். கருவுறுதல் விகிதம் குறைவதற்கு முக்கிய காரணம் பெண்கள் கல்வி கற்பது தான். இப்போது, பெண்கள் கல்வி கற்கிறார்கள், வேலையும் செய்கிறார்கள். இதன் காரணமாக, பெண்கள் குறைவான குழந்தைகளை விரும்பிகிறார்கள்.

சமீபத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 மார்ச் 1ஆம் தேதி  நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடைசியாக 2011ஆம் ஆண்டு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 16 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை  கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை தெரிய வரும்.