Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உலக நாடுகளை சந்திக்கும் எம்.பிக்கள் குழு.. பாகிஸ்தானுக்கு அழுத்தமா? முக்கியத்துவம் என்ன?

All party delegation on Operation sindoor : ஆபேரஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க 7 எம்பிக்கள் குழுக்களில், இரண்டு எம்.பிக்கள் குழு 2025 மே 21ஆம் தேதியான இன்று வெளிநாடுகளுக்கு புறப்படுகிறது. எனவே, இந்த எம்.பிக்களின் குழுக்களின் செயல்பாடு, முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

உலக நாடுகளை சந்திக்கும் எம்.பிக்கள் குழு.. பாகிஸ்தானுக்கு அழுத்தமா?  முக்கியத்துவம் என்ன?
சசி தரூர் - கனிமொழி - சுப்ரியா சுலேImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 May 2025 11:41 AM

டெல்லி, மே 21 :  ஆபேரஷன் சிந்தூர் (Operation sindoor) குறித்தும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு (Pakistan terror attack) முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க 7 எம்.பிக்கள் கொண்ட குழு 2025 மே 20ஆம் தேதியான இன்று தங்கள் பயணத்தை தொடங்குகிறது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத (pahalgam attack) தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த தாக்குதல், 2025 மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. பயங்கரவாதத்தை ஒழிக்கு முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.  அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வைக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் குறித்தும் உலக நாடுகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

உலக நாடுகளை சந்திக்கும் எம்.பிக்கள் குழு

அதன்படி, இதற்காக 7 எம்.பிக்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியின் எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, பீகார் பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், தமிழகத்தின் திமுக எம்.பி கனிமொழி, பைஜயந்த் பாண்டா, பீகார் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் குமார் ஜா, மகாராஷ்ரா தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரிய சுலே ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 7 எம்.பிக்கள் கொண்ட குழுவும்  2025 மே 21ஆம் தேதி இன்று முதல் பயணத்தை தொடங்குகிறது. 2025 மே 21ஆம் தேதியான இன்று இரண்டு எம்.பி குழுக்கள்  வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான குழு முதலில் புறப்படுகிறது. இந்த குழு இந்தோனேசியா, மலேசியா, கொரிய குடியரசு, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

இதில் பாஜக எம்பிக்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், ஹேமங் ஜோஷி, பிரதான் பருவா, திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, சிபிஎம்மின் ஜான் பிரிட்டாஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் மற்றும் முன்னாள் தூதர் மோகன் குமார் ஆகியோர் உள்ளனர்.

 33 நாடுகளுக்கு பயணம்


இரண்டாவதாக, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு புறப்படுகிறது. இந்த குழு துபாய், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்தக் குழுவில் பாஜக எம்பிக்கள் பன்சூரி ஸ்வராஜ், அதுல் கார்க், மனன் குமார் மிஸ்ரா, முன்னாள் எம்பி எஸ்எஸ் அலுவாலியா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி இடி முகமது பஷீர், பிஜேடி எம்பி சஸ்மித் பத்ரா மற்றும் முன்னாள் தூதர் சுஜன் சினாய் இடம்பெற்றுளளனர். இந்த குழு இன்று புறப்பட்டு, 2025 ஜூன் 3ஆம் தேதி டெல்லிக்கு திரும்புகிறது.

அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மீதமுள்ள 5 குழுக்களும் புறப்படுகின்றனர். இதில், அந்த குழுக்கள் கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா, இத்தாலி, டென்மார்க், யுனைடெட் கிங்டம், பெல்ஜியம், ஜெர்மினி, ஜப்பான், அரேபியா, குவைத், சவுதி உள்ளிட்ட 33 நாடுகளுக்கு செல்கின்றனர்.

முக்கியத்துவம் என்ன?

33 நாடுகளுக்கு எம்.பிக்கள் குழுவை அனுப்புவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த 33 நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள், தற்காலிக உறுப்பு நாடுகள், அடுத்த பதவிக் காலத்தில் தற்காலிக உறுப்பு நாடுகளாக இருக்க உள்ள நாடுகள் ஆகும்.   இந்த நாடுகளிடம் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைபாட்டையும், பயங்கரவாதத்தால் இந்தியா எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பதையும் இந்த எம்.பிக்கள் குழு விவரிக்க உள்ளனர். இந்த 33 நாடுகளுக்கு தூதரக அதிகாரிகளை அனுப்பி தங்களின் நிலைபாடுகளை எடுத்துரைப்பதை விட, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அனுப்பி தங்கள் நிலைபாட்டை எடுத்துரைப்பது சிறப்பாக இருக்கும் என இந்திய கருதுகிறது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!...
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!...
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?...
பல் பிரச்சனைகளுக்கு தீர்வுதரும் பதஞ்சலியின் டான்ட் காந்தி பேஸ்ட்
பல் பிரச்சனைகளுக்கு தீர்வுதரும் பதஞ்சலியின் டான்ட் காந்தி பேஸ்ட்...
கழிவுநீர் தொட்டியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான பாம்புகள்!
கழிவுநீர் தொட்டியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான பாம்புகள்!...
அதிக வியர்வையும் ஆபத்து.. தேடி வரும் சம்மர் பிரச்னைகள் என்ன?
அதிக வியர்வையும் ஆபத்து.. தேடி வரும் சம்மர் பிரச்னைகள் என்ன?...
குப்பை கழிவுகளால் யானை உயிரிழப்பு! பகுதி முழுவதும் குப்பை போட தடை
குப்பை கழிவுகளால் யானை உயிரிழப்பு! பகுதி முழுவதும் குப்பை போட தடை...
சிவகார்த்திகேயனுக்காக நீங்க அத பன்னுவீங்களா? - நடிகர் சூரி பதில்
சிவகார்த்திகேயனுக்காக நீங்க அத பன்னுவீங்களா? - நடிகர் சூரி பதில்...