குப்பை கொட்டிய விவகாரம்.. அண்ணனை கோடாரியால் வெட்டி கொன்ற தம்பி.. பகீர் சம்பவம்!

Man Killed His Elder Brother in UP | உத்தர பிரதேசத்தில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட சிறிய தகராறு வாக்குவாதமாக முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தம்பி அண்ணனை கோடாரியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கொட்டிய விவகாரம்.. அண்ணனை கோடாரியால் வெட்டி கொன்ற தம்பி.. பகீர் சம்பவம்!

கொலை செய்யப்பட்டவர்

Updated On: 

02 Oct 2025 07:50 AM

 IST

ஹாப்பூர், அக்டோபர் 02 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) குப்பை கொட்டிய விவகாரத்தில் சொந்த அண்ணனை தம்பி வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பியின் மகள் தனது வீட்டின் முன்பு குப்பை கொட்டிய நிலையில், அதனை அண்ணன் தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், குப்பை கொட்டும் விவகாரத்தில் தம்பி, அண்ணனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குப்பை கொட்டிய விவகாரம் – அண்ணனை கொலை செய்த தம்பி

உத்திர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில் வசித்து வருபவர் வீரேந்திரா. இவருக்கு சுனில் என்ற ஒரு இளைய சகோதரர் உள்ளார். சம்பவத்தன்று சுனிலின் மகள் வீரேந்திராவின் வீட்டின் முன்பு குப்பை வீசி சென்றுள்ளார். அதனைக் கண்டு அவர் தம்பியின் மகளை கண்டித்துள்ளார். அண்ணன் தனது மகளை கண்டித்து குறித்து சுனிலுக்கு தெரிய வர அவர் வீரேந்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க : துபாயில் இருந்து வந்ததும் இப்படியா? மனைவியை கொன்ற கணவர்.. ஷாக் பின்னணி!

கோடாரியால் சரமாரியாக வெட்டிய தம்பி

இருவரும் மாறி மாறி வாக்கு வாதம் நடத்திய நிலையில், ஒரு கட்டத்தில் அது தகராறாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனில் வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து வீரேந்திராவை சரமாரியாக வெட்டியுள்ளார். அவர் மட்டுமன்றி சுனிலின் மனைவில் குட்டோவும் வீரேந்திராவை, கம்புகளால் தாக்கியுள்ளார். சுனில் மற்றும் அவரது மனைவி தாக்கியதில் பலத்த காயமடைந்த வீரேந்தராவை அவரது குடும்ப உறுப்பினர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக மீரட் நகருக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : Crime: ஒன்னா, ரெண்டா.. ஊரையே ஏமாற்றிய 13 பேர் கொண்ட கும்பல்!

இந்த விவகாரம் தொடர்பாக வீரேந்திராவின் மனைவி சஞ்சல் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட சுனில் மற்றும் அவரது மனைவி குட்டோ ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை கொட்டிய விவகாரத்தில் சொந்த தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.