தமிழரை நிறுத்தினால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் குறித்து கனிமொழி கேள்வி!

Kanimozhi MP On BJP Vice President Candidate : துணை ஜனாதிபதி தேர்தலுக்காக நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளது என அர்த்தமாகிவிடாது என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தமிழரை நிறுத்தினால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் குறித்து  கனிமொழி கேள்வி!

கனிமொழி எம்பி

Updated On: 

19 Aug 2025 16:23 PM

டெல்லி, ஆகஸ்ட் 19 :  தமிழ்நாட்டையும், தமிழர்களையும் மதிக்காத பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனை (CP Radhakrishnan) வேட்பாளராக நிறுத்திவிட்டதாலேயே ஆதரிக்க முடியும் என்றும் சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டையில் அரசியலமைப்பை மதிப்பவரையே திமுகவும் ஆதிரிக்கும் என எம்.பி கனிமொழி (Kanimozhi MP) தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் 2025 ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். உடல்நிலையை காரணம் காட்டி, ஜக்தீப் தன்கர் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார். ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை அறிவித்தது. அதாவது, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 2025 ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். பின்னர், துணை ஜனாதிபதி தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடக்கிறது. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட மகாராஷ்ரா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Also Read : நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..

வேட்பாளரை நிறுத்தினால் மட்டும் போதுமா?


தொடர்ந்து, இந்தியா கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியை அறிவித்துள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழர் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இதுபற்றி கனிமொழி எம்.பி பேசியுள்ளார். அவர் பேசுகையில், “அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளோம்.  துணை ஜனாதிபதி தேர்தல் என்பது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். பிளவுவாத, இந்துத்துவா அரசியலை எதிர்க்கக் கூடிய வகையில், இந்த தேர்தல் அமைந்திருக்கும்.

Also Read : சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..

இது கருத்தியல் ரீதியான போட்டி. ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் உள்ள ஒரு வேட்பாளரை (சி.பி.ராதாகிருஷ்ணன்) எதிர்க்கும் வகையில், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரை முன்மொழிந்துள்ளோம்நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர், அரசமைப்புச் சட்டத்தை மதிப்பவர். இந்துத்துவா அரசியலை எதிர்த்து பேசுபவர். அவர்கள் (பாஜக) தேர்வு செய்த வேட்பாளர், தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தால் மட்டும் போதுமா? தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதாக அர்த்தமாகி விடாது” என கூறினார்.