Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அகமதாபாத் விமான விபத்து.. ஏர் இந்தியாவுக்கு பறந்த உத்தரவு.. மத்திய அரசு அதிரடி!

Ahmedabad Plane Crash : அகமதாபாத் நடந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதனை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், 2025 ஜூன் 15ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமானம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

அகமதாபாத் விமான விபத்து.. ஏர் இந்தியாவுக்கு பறந்த உத்தரவு.. மத்திய அரசு அதிரடி!
ஏர் இந்தியாImage Source: Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 Jun 2025 07:14 AM

டெல்லி, ஜூன் 14 : அகமதாபாத் விமான விபத்தை (Ahmedabad Plane Crash) தொடர்ந்து, ஏர் இந்தியாவின் (Air India Boeing Dreamliners) போயிங் 787-8 மற்றும் 787-9 விமானங்களின் பாதுகாப்பு சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA Safety Investigation) உத்தரவிட்டுள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. மதியம் 1.30 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம், மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து சிதறியது. இந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 உயிரிழந்த நிலையில், ஒருவரை மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், விமானத்தில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

அகமதாபாத் விமான விபத்து

இது ஒருபக்கம் ஏர் இந்தியா விமானத்தின் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதனை நிறுவனம் சரி செய்யவும் இல்லை எனவும் சமூக வலைதளங்களில் பலரும் குற்றச்சாட்டை பதிவை செய்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏர் இந்தியாவின் போயிங் 787-8 மற்றும் 787-9 விமானங்களின் பாதுகாப்பு சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்  என உத்தரவிட்டுள்ளது.

2025 ஜூன் 15ஆம் தேதியான நாளை முதல் ஏர் இந்தியாவின் ஜென்எக்ஸ் என்ஜின்கள் கொண்ட ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்களின் அறிக்கையும் சமர்பிக்க வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்  உத்தரவிட்டுள்ளது.

சோதனை தீவிரப்படுத்த உத்தரவு

கடந்த 15 நாட்களில் போயிங் ட்ரீம்லைனர் விமானங்களில் ஏற்பட்ட கோளாறுகளை விரைவில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மறுஆய்வுக்குப் பிறகு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏரிபொருள் அளவு, அதன் தொடர்புடைய சோதனையும், என்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பின் சோதனை, என்ஜின் ஏரிபொருள் மூலம் இயங்கும் கருவியின் செயல்பாடு, விமானத்திற்குள் இருக்கும் காற்றழுத்த கருவி, ஹைட்ராலிக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.