AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.. 156 பயணிகளுக்கு என்னாச்சு?

Air India Flight : வெடி குண்டு மிரட்டலை அடுத்து, ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. 152 பயணிகளுடன் டெல்லி செல்ல புறப்பட்ட சில மணி நிமிடங்களிலேயே அவசரமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அகமதாபாத் விமான விபத்து நடந்த நிலையில், 2025 ஜூன் 13ஆம் தேதியான இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.. 156 பயணிகளுக்கு என்னாச்சு?
ஏர் இந்தியா விமானம்Image Source: Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Jun 2025 13:05 PM IST

டெல்லி, ஜூன் 13 : ஏர் இந்திய விமானம் (Air India) தாய்லாந்தில் அவசரமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அகமதாபாத்தில் (Ahmedabad Air India Flight Crash) ஏர் இந்தியா விமான விபத்தை அடுத்து, இந்த சம்பவம் நடந்துள்ளது.  156 பயணிகளுடன் டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, தாய்லாந்தின் ஃபூகெட்டில் அவசரமாக விமான தரையிறங்கியது. விமானம் AI 379 விமானம் டெல்லி செல்ல இருந்த நிலையில், அவசரமாக தரையிறங்கியது. தரையிறங்கிய உடன் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். என்டிடிவி தகவலின்படி, 2025 ஜூன் 13ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டது. அப்போது, வெடிகுண்டு விடுக்கப்பட்டதை அடுத்து, ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியது.

அகமதாபாத் விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8ட்ரீம்லைனர் ரக விமானம், 2025 ஜூன் 12ஆம் தேதியான நேற்று மதியம் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விமானம் விழுந்து சிதறியது. இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

இந்த விபத்தின்போது, விமானத்தில் 230 பயணிகள், 2 பைலட்டுகள், 10 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்களில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.   இந்த விபத்து ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி  நிவாரணமாக வழங்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.  மேலும், சேதம் அடைந்த  மருத்துவ கல்லூரி விடுதியும் கட்டித் தருவதாகவும் டாடா குழுமம் கூறியது.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், விமானத்தில் இரண்டு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”ஓடுபாதையில் மேல் எழுந்து பறக்க தேவையான உந்துவிசையை விமானத்தின் என்ஜின்களால் உருவக்க முடியவில்லை.

பிரதமர் மோடி நேரில் ஆய்வு


2 என்ஜின்களும் செயலிழந்திருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு என்ஜின் செயலிழந்திருந்தால் விமானம் நடுவானில் தடுமாறி இருக்கும். ஆனால், இரண்டுமே செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என கூறினார். இதற்கிடையில்,  பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.  மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தவரை நேரில்  சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”இன்று அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது. அதன் பின்னர் அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்களைச் சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் இருக்கும்” என்றார்.

Follow Us