டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்… பொதுமக்களை சந்தித்த போது நடந்த சம்பவம்.. பரபரப்பு!

Delhi CM Rekha Gupta : டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள வீட்டில் பொதுமக்களை சந்தித்து பேசியபோது, மனு கொடுக்க வந்த நபர், அவரை தாக்கியுள்ளார். அந்த நபர் 40 வயதான ராஜேஷ் சகாரியா என தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டெல்லி  முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்... பொதுமக்களை சந்தித்த போது நடந்த சம்பவம்.. பரபரப்பு!

டெல்லி முதல்வர் ரேகா குப்தா

Updated On: 

20 Aug 2025 10:45 AM

டெல்லி, ஆகஸ்ட் 20 : டெல்லி முதல்வர் ரேகா குப்தா (Delhi CM Rekha Gupta) மீது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள வீட்டில் பொதுமக்களை சந்தித்து பேசியபோது, முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர்.   டெல்லியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா இருந்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டெல்லி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததை அடுத்து, ரேகா குப்தா முதல்வராக பொறுப்பேற்றார்இதற்கிடையில், 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லியில் பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்களை சந்தித்தார்அப்போது, அங்கு இருந்த மர்ம நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவை தாக்கியதாக கூறப்படுகிறது. குறைதீர்ப்பு முகாமில் முதல்வர் ரேகா குப்தாவிடம் மனு அளிக்க சென்ற அவர், திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தமாக கத்திக் கொண்டு, முதல்வராக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ரேகா குப்தா கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடாகவே கருதப்படுகிறது.

Also Read : துணை குடியரசுத் தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்


முதற்கட்ட தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவர் ராஜேஷ் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 40 வயது இருக்கலாம். அவர் குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டைச் சேர்ந்தவர். இவர் எந்த காரணத்திற்காக தாக்கினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் ராஜேஷ் சகாரியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி போலீசாரும் உஷார் நிலையில் உள்ளனர். மேலும், டெல்லி முதல்வர் அலுவலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “இன்று காலை முதல்வர் எப்போதும் போல பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஒரு நபர் அவரை அணுகி, சில மனுக்களை வழங்கி, திடீரென்று அவரது கையைப் பிடித்து அவரை தன் பக்கம் இழுக்க முயன்றார்.

Also Read : பிரதமர் மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்..

இந்த நேரத்தில், சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவரை தாக்கியும் இருக்கிறார். உடனே மக்கள் அந்த நபரை பிடித்தனர். அந்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. முதல்வர் நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துள்ளனர். அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவைஎன கூறினார்.