அதிர்ந்த டெல்லி.. 17 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கைதான சாமியார்!

Delhi Baba Arrest : டெல்லியில் உள்ள ஆசிரமத்தில் 17 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். 50 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், 2025 செப்டம்பர் 28ஆம் தேதியான இன்று டெல்லி போலீசார் அவரை ஆக்ராவில் கைது செய்தனர்

அதிர்ந்த டெல்லி.. 17 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கைதான சாமியார்!

கைதான சாமியார்

Updated On: 

28 Sep 2025 11:01 AM

 IST

டெல்லி, செப்டம்பர் 28 : டெல்லியில் உள்ள ஆசிரமத்தில் 17 பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், 2025 செப்டம்பர் 28ஆம் தேதியான இன்று டெல்லி போலீசார் அவரை ஆக்ராவில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.  நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக  பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்  அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான், டெல்லியில் அரங்கேறி உள்ளது.

அதாவது, தலைநகர் டெல்லியில் ஆசிரமத்தில் 17 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆக்ராவில் கைது செய்யப்பட்டார்.  அதாவது, சைதன்யானந்த் சரஸ்வதி என்று கூறப்படும் பாரத்தசாரதி, டெல்லி வசத்து கஞ்சில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் மீது 17 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை கொடுத்தனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் 17 பெண்கள் புகார் அளித்தனர். டெல்லி பாபா பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளில் (EWS) உதவித்தொகை பெறும் முதுகலை மேலாண்மை டிப்ளமோ மாணவர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினர்.

Also Read : 126வது மன் கி பாத் நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடையே பேசப்போகும் பிரதமர் மோடி..

17 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

மாணவிகளை நிறுவனத்தில் பணிபுரியும் சில வார்டன்கள் தங்களை பாபாவிடம் அறிமுகப்படுத்தியதாகக் கூறியுள்ளனர். அவர் மாணவர்களை தனது அறைக்கு அழைத்து, இலவச வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் விடுதியில் ரகசிய கேமேராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக மாணவிகள் கூறினர்.

Also Read : சட்டவிரோதமாக செயல்பட்டதாக மிரட்டிய கும்பல்.. இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.73 லட்சம் மோசடி.. பகீர் சம்பவம்!

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின்பேரின் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த புகாரை அடுத்து, சாமியார் வாக இருந்த பின்னர், சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாக இருந்தார். இவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தற்போது சாமியார் கைதாகி உள்ளார். ஆக்ராவின் தாஜ் கஞ்சில் உள்ள ஹோட்டல் ஃபர்ஸ்டில் அதிகாலை 3:30 மணியளவில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.