மத்திய பிரதேசம், ஹரியானா, சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!

Continuous Earthquake In Three States | இந்தியாவில் மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் சிக்கிம் ஆகிய பகிதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தொடர் நிலநடுக்கங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மத்திய பிரதேசம், ஹரியானா, சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

29 Mar 2026 15:00 PM

 IST

புதுடெல்லி, மார்ச் 29 : இந்தியாவில் மத்திய பிரதேசம் (Madhya Pradesh), ஹரியானா (Haryana) மற்றும் சிக்கிம் (Sikkim) ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம்

மத்திய பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.57 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவு செய்யப்பட்டது. மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து ஹரியானாவில் காலை 6.47 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம் – முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம்

ஹரியானாவில் இரண்டு முறை நிலநடுக்கம்

அதனை தொடர்ந்து ஹரியானாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக காலை 6.53 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவை தொடர்ந்து சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு சரியாக காலை 10.54 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பல மாநிலங்களில் 4 நிலநடுக்கங்கள்

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பானதாக உள்ளது. தினசரி ஏதேனும் பகுதிகளில் நிலநடுக்க ஏற்பட்டு வருகிறது. ஆனால், இன்று ஒரே நாளில் மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
ரயில்வே கேட்டரிங்கு 10 லட்சம் அபராதம் .. ரயில்வே அதிரடி..
ஹோர்முஸ் கடல் பாதை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி - ஈரான் அறிவிப்பு
மெட்டா மற்றும் கூகுள் எதிராக பெண் தொடர்ந்த வழக்கு.. 6 மில்லியன் டாலர் பெண்ணுக்கு வழங்க உத்தரவு..
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு