வரதட்சணை கொடுமை.. திருமணமான 6 மாதங்களில் இளம் பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
Bengaluru Dowry Harassment | இந்தியா முழுவதும் வரதட்சணை கொடுமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, அக்டோபர் 25 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரில் (Bengaluru) உள்ள எடமனே கிராமத்தை சேர்ந்தவர் மாலாஸ்ரீ. 23 வயதான இவருக்கும் சிவமொக்கா தாலுகா கும்பி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கூஜானுமக்கி கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கும் 2025, ஏப்ரல் 23 அன்று பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு அந்த பெண் தனது கணவருடன் அவரது கிராமத்திலேயே வசிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில், தான் அசோக் மற்றும் அவரது பெற்றோர் அந்த பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ய தொடங்கியுள்ளனர்.
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பம்
திருமணத்தின்போது அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு நகை, பணம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், அசோக்கின் குடும்பத்தினர் அது போதாது என கூடுதலாக வரதட்சணை கேட்டுள்ளனர். அதற்காக அந்த பெண்ணை அடித்து, உதைத்து அசோக் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று ஒரு மாதம் அங்கேயே இருந்துள்ளார். இந்த நிலையில், அசோக் தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து வந்துள்ளார். ஆனால், அப்போதும் அவர் வரதட்சணை கேட்பதை நிறுத்தவில்லை. தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவர் கொடுமை படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
மனமுடைந்த பெண் வீட்டில் தற்கொலை
கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்ந்து கொடுமை செய்து வந்த நிலையில், அந்த பெண் கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அக்டோபர் 23, 2025 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது மகளின் மரணத்திற்கு அவரது கணவர் அசோக், மற்றும் அவரின் குடும்பத்தார் தான் காரணம் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் பறிபோன குழந்தைகள் கண்பார்வை.. திடுக் சம்பவம்!
பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மாலாஸ்ரீயின் கணவர் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.