Air India Plane Skid Off Runway: மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கும் ஏர் இந்தியா.. மும்பையில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்ற விமானம்..!
Air India Faces Fresh Crisis: கொச்சியிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் AI-2744, கனமழையில் ஓடுபாதையில் இருந்து விலகியது. மூன்று டயர்கள் வெடித்தன. அதிர்ஷ்டவசமாக, 136 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். இதற்கு முன்னர், ஜார்கண்டிலிருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.

ஏர் இந்தியா விமானம்
மும்பை, ஜூலை 21: ஏர் இந்தியா (Air India) விமானங்கள் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. முன்னதாக, 2025 ஜூலை 21ம் தேதியான இன்று ஜார்கண்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மும்பை விமான நிலையத்திலும் (Mumbai Airport) இதுபோன்ற சம்பவம் ஒன்று அடங்கேறியுள்ளது. அதாவது, கொச்சியிலிருந்து மும்பைக்கு சென்ற AI-2744 விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் இருந்து சறுக்கியது. இதனால், பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பலத்த மழைக்கு மத்தியில் AI-2744 விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, 3 டயர்கள் வெடித்து, பிரதான ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, 136 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நல்லவேளையாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் ஏர் இந்தியா சம்பந்தப்பட்ட சமீபத்திய விபத்துகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்த்தது.
ALSO READ: மும்பை 7/11 ரயில் குண்டுவெடிப்பு.. 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
என்ன நடந்தது..?
2025 ஜூலை 21ம் தேதியான இன்று காலை 9.27 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-2744 விமானம் கொச்சியிலிருந்து மும்பைக்கு வந்தது. தரையிறங்கும்போது, கனமழை மற்றும் மோசமான தெரிவுநிலை காரணமாக ஓடுபாதை 27ல் வேகத்தை குறைக்கும்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இது பிரதான ஓடுபாதையில் இருந்து 16-17 மீட்டர் தொலைவில் ஒரு கரடுமுரடான பகுதியில் சரிந்து, பின்னர் டாக்ஸிவேயில் நின்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக விமானங்கள் 3 டயர்கள் வெடித்தன. இதனால், விமானத்தின் இயந்திரமும் சேதமடைய வாய்ப்பிருந்தது.
விமானம் எப்படியோ பார்க்கிங் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து விமான நிலைய செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ஜூலை 21, 2025ம் தேதியான இன்று காலை 9.27 மணிக்கு கொச்சியிலிருந்து வந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். 09/27 பிரதான ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. விமான நடவடிக்கைகளை சீராக வைத்திருக்க இரண்டாம் நிலை ஓடுபாதை 14/32 செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமை.” என்று தெரிவித்தார்.
ALSO READ: புறப்படும்போது ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்!
ஏர் இந்தியா விளக்கம்:
🚨🇮🇳 AIR INDIA FLIGHT SKIDS OFF MUMBAI RUNWAY DUE TO HEAVY RAIN
An Air India flight (AI 2744), an Airbus A320, skidded off the runway while landing at Mumbai Airport after flying from Kochi. pic.twitter.com/93BO9fOe9B
— ExtraOrdinary (@Extreo_) July 21, 2025
ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், “கனமழை காரணமாக தரையிறங்கிய பிறகு, AI-2744 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது. விமானம் பாதுகாப்பாக கேட்டை மூடியது. மேலும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறங்கினர். விசாரணைக்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.