ஆப்கானிஸ்தானில் இந்தியருக்கு இப்படி ஒரு மரியாதையா…வைரலாகும் வீடியோ!
Afghans Respect To Indians: ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் அருந்திய மாதுளை பழச்சாறுக்கு அந்த நாட்டின் கடைக்காரர் பணம் வாங்க மறுத்ததுடன், இந்தியர்கள் எங்கள் விருந்தினர்கள் என்று ஆரூடம் சூட்டி உள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானில் இந்தியருக்கு அளிக்கப்பட்ட மரியாதை
இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா செல்லும் நபரான கைலாஷ் மீனா என்பவர் ஆப்கானிஸ்தான் சென்ற நிலையில், அங்கு தனக்கு நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கைலாஷ் மீனா ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு தெருக் கடையில் மாதுளை பழச்சாறு அருந்தினார். அப்போது அதற்கான பணத்தை பழச்சாறு கடைக்காரரிடம் கொடுத்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த பணத்தை கடைக்காரர் வாங்க மறுத்ததுடன், அவரை தன் நாட்டு விருந்தினர் என்று அன்புடன் அழைத்தார். மேலும், ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் எங்கு சென்றாலும் யாரும் உங்களிடம் பணத்தை வாங்க மாட்டார்கள் என்று கூறினார். இதனால், கைலாஷ் மீனா மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தார்.
ஆப்கானிஸ்தானில் இந்தியருக்கு இப்படியொரு மரியாதையா
இதை கேட்ட சுற்றுலா சென்ற நபரான கைலாஷ் மீனா என்னிடம் மாதுளை பழச்சாறுக்கான பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும், எனக்கு இலவசமாக பழச்சாறு தர வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். இருந்தாலும், அந்த கடைக்காரர் மாதுளை பழச்சாறுக்கான பணத்தை பெற மறுத்து விட்டார். இந்த நிகழ்வை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உள்ளூர் மக்களிடம் கைலாஷ் மீனா தெரிவித்து நெகிழ்ச்சி அடைந்தார். அப்போது, உள்ளூர் வாசிகளில் ஒரு நபர் ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மரியாதையுடனும், அன்புடனும் நடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க:1,000 உயரம், 55 மீட்டர் நீளம்.. இந்தியாவின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் திறப்பு!
இந்தியர்கள் எங்கள் விருந்தினர்கள்
மேலும், பழச்சாறு கடையின் விற்பனையாளரும், உள்ளூர் வாசிகளும் இந்தியா எங்கள் விருந்தினர்கள், ஹிந்துஸ்தான் மிகவும் நல்ல நாடு என்று தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவை கைலாஷ் மீனா தனது செல்போனில் பதிவு செய்து “ஆப்கானிஸ்தான் விருந்தோம்பல்” “ஆப்கானிஸ்தானில் இந்தியர்களுக்கு ஏன் எல்லாம் இலவசம்” என்ற வாசகத்துடன் இந்த காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் பரஸ்பர உறவு
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுடன் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் முறையான பரஸ்பர உறவு இருந்து வருகிறது. அண்மையில் கூட ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான சமூகமான உறவை வெளிகாட்டி இருந்தது.
மேலும் படிக்க: வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடிய கணவன்.. கண்டித்ததால் கழுத்தை நெறித்து மனைவி கொலை!
உள்ளப்பூர்வமாக எடுத்து காண்பிக்கும் நிகழ்வு
தற்போது இந்தியாவை சேர்ந்த பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா நபரான கைலாஷ் மீனா என்பவர் ஆப்கானிஸ்தான் சென்ற நிலையில் அவரிடம் பழச்சாறுக்கான பணத்தை பெறாமலும், இந்தியர்கள் எங்கள் விருந்தினர்கள் என்றும் இந்தியா நல்ல நாடு என்றும் ஆப்கானிஸ்தான் உள்ளூர் மக்கள் தெரிவித்திருந்தது அந்த நாட்டில் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் உள்ள மரியாதையை உள்ள பூர்வமாக எடுத்து காண்பிக்கிறது.