நெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு…நுழைவுச்சீட்டு வெளியீடு!

Ucg Net Exam Admit Cards Release: பல்கலைக் கழக மானியக் குழுவின் நெட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டில் உள்ள வழிமுறைகளை படிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

நெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு...நுழைவுச்சீட்டு வெளியீடு!

நெட் தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு

Published: 

30 Dec 2025 12:10 PM

 IST

நாடு முழுவதும் பல்கலைக் கழக மானியக் குழுவின் நெட் தேர்வு ஜனவரி 2- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு, ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை UGCNET.NTA.NIC.IN என்ற இணையதளத்தில் பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெட் தேர்வு தொடர்பாக கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில், UGC NET டிசம்பர் 2025 தேர்வு 85 பாடங்களுக்கு கணினி வகையிலான தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது நாடு முழுவதும் உள்ள மையங்களில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 2, 3, 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

பல்கலைக்கழக மானிய குழு சார்பில்

இந்த தேர்வை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானிய குழு சார்பில் பொறுப்பான தேசிய தேர்வு முகமையால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட நகர அறிவிப்பு சீட்டு மூலம், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தேர்வு நகரம் மற்றும் தேதி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மற்ற நாட்களில் நடைபெறும் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு உரிய நேரத்தில் தனித் தனியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சுனாமி தாக்குதலை எதிர்கொள்ள புதிய முயற்சி…தயார் நிலையில் 100 கிராமங்கள்…எங்கு தெரியுமா!

நுழைவுச் சீட்டு தொடர்பான புகார் அளிக்க

இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை பெறுவதில் ஏதேனும் முரண்பாடு அல்லது சிரமம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர்கள் என்டிஏ வருகை மையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது UGCNET@NTA.AC.IN என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் தேர்வானது 3 மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வில் இரு தாள்கள் உள்ளன. முதல் தாளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திறனை மதிப்பீடு செய்தல் மற்றும் 50 கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

நெட் தேர்வு 2- ஆம் தாளில் உள்ள கேள்விகள்

2- ஆம் தாளில் பாடம் சார்ந்த 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ததுடன், தேர்வர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான தேர்வு மையம், பதிவு எண் மற்றும் தேர்வு எழுதும் நேரம் ஆகிய முக்கிய விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 21 வயதில் நகராட்சி தலைவரான மாணவி…எந்த ஊரில்…யார் இவர்!

Related Stories
இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு