75 வயதில் இரண்டாம் திருமணம்.. முதலிரவு முடிந்து பார்த்தால் அதிர்ச்சி!
Uttar Pradesh Tragedy: உத்தரப்பிரதேசத்தில் 75 வயது முதியவர் சங்ருராம் தனது இரண்டாவது திருமணம் செய்த மறுநாளே திடீரென உயிரிழந்தார். ஜான்பூர் கிராமத்தில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் எழுப்பி, இயற்கை மரணம் இல்லை எனக்கூறி இறுதிச்சடங்குகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

உயிரிழந்த சங்ருராம்
உத்தரப்பிரதேசம், அக்டோபர் 1: உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது திருமணம் செய்த 75 வயது முதியவர், ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தில் இருக்கும் குச்முச் கிராமத்தைச் சேர்ந்த சங்ருராம் என்பவர் தான் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவி இறந்ததிலிருந்து சங்ருராம் தனியாக வசித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் விவசாயம் மூலம் குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே தனக்கு ஆதரவாக இருந்த மனைவியும் சென்று விட்டதால் தனிமை சங்ருராமை வாட்டி வதைத்தது. இதனால் அவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தார். இதற்காக சங்ருராம் தனது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து பேசினார்.
ஆனால் அவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதையும் மீறி மறுமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். அதன்படி கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று, ஜலால்பூரைச் சேர்ந்த 35 வயதான மன்பவதியை மணந்தார். திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் கோவிலில் பாரம்பரிய சடங்குகள் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: என்னை தொட்டால்.. 35 துண்டாக வெட்டுவேன் -முதலிரவில் மிரட்டிய மனைவி..
தனிமைக்குப் பிறகு அந்த முதியவர் தனக்கான துணையை தேடிக் கொண்டதால் உறவினர்கள் எதுவும் சொல்லாமல் நிகழ்வில் பங்கேற்றனர். இதனிடையே திருமணத்திற்குப் பிறகு, மனைவி மன்பவதி கிராம மக்களிடம் தனது கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வார் என்றும், வீட்டுப் பொறுப்புகளை தான் கவனித்துக்கொள்வேன் என்றும் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே புதுமணத் தம்பதிகளின் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் திருமண இரவின் பெரும்பகுதியை உரையாடலில் கழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 30) காலையில் சங்ருராமின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனையடுத்து மன்பவதி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக சங்ருராமை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனைச் செய்து வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டாவதாக திருமணம் செய்து மண வாழ்க்கையின் புதிய தொடக்கமாக இருக்க வேண்டிய இரவில் நடந்த நிகழ்வு குடும்பத்தினரையும் மட்டுமல்லாமல் முழு கிராமத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படிங்க: துபாயில் இருந்து வந்ததும் இப்படியா? மனைவியை கொன்ற கணவர்.. ஷாக் பின்னணி!
ஆனால் இந்த மரணம் சந்தேகத்திற்கு வழிவகுத்துள்ளது. 75 வயது முதியவர் என்பதால், வயது முதிர்வு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் டெல்லியைச் சேர்ந்த சங்ருராமின் உறவினர்கள், மருமகன்கள் உட்பட பலரும் இது இயற்கை மரணமாக இருக்க வாய்ப்பில்லை என சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் வரும் வரை இறுதிச் சடங்கை நிறுத்தி வைத்துள்ளனர்.
சட்டப்படி காவல்துறையில் புகார் அளிக்கும் பட்சத்தில் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடுவார்களா அல்லது அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடுவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.