வேளாண் படிப்புகளுக்கு போட்டித் தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு
UG Agriculture Exam : வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இளங்கலை இடங்கள் இனி அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பில் உயிரியல், வேதியில், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்

தேர்வ
டெல்லி, அக்டோபர் 04 : வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இளங்கலை இடங்கள் இனி அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பில் உயிரியல், வேதியில், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். பொறியியல், மருத்துவம் படிப்பிற்கு அடுத்தப்படியாக மாணவர்கள் பெரும்பாலும் வேளாண் படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். வேளாண் இளங்கலை படிப்பு ஐந்து ஆண்டுகள் ஆகும். 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 3,370 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 4,405 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேளாண் இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘ஒரு நாடு-ஒரு விவசாயம்-ஒரு குழு’ என்ற கொள்கைக்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் பாடக் குழுக்கள் ஒரே மாதிரியாக மாற்றப்பட்டுள்ளன. இது 12 ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மை படித்த மாணவர்கள் CUET-ICAR தேசிய நுழைவுத் தேர்வின் மூலம் வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர முடியும் என வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு
In a major relief in #agricultural education, Union Minister for Agriculture and Farmers’ Welfare @ChouhanShivraj announces filling 20% of undergraduate seats in agricultural universities through an all-India competitive examination.
Ministry of Agriculture and Farmers’ Welfare… pic.twitter.com/39O1hOyg3R
— All India Radio News (@airnewsalerts) October 3, 2025
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அரசு சிவராஜ் சிங், “இளங்கலை வேளாண் படிப்புகளில் சில தகுதிகள் காரணமாக மாணவர்கள் சேர முடியாமல் இருந்து வருகின்றனர். சமீபத்திய நாட்களில், மாணவர்கள் இது தொடர்பான பிரச்னையை கூறி வருகின்றனர். மேலும் சில மாநில பிரதிநிதிகளும் இது குறித்து அமைச்சருக்கு கடிதம் எழுதினர்.
இந்தப் பிரச்சினையை உடனடியாகக் கவனத்தில் கொண்டு, வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் துணைவேந்தர்களுடன் இணைந்து விரைவான தீர்வைக் கொண்டு வர வேண்டும். 2025-26 கல்வியாண்டிலிருந்து வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இளங்கலை இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) நடத்தும் அகில இந்திய போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
12ஆம் வகுப்பில் உயிரியல், வேதியில், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனால் சுமார் 3,000 மாணவர்கள் நேரடியாக பயனடைவார்கள்” என்று தெரிவித்தார். இந்த போட்டித் தேர்வு மத்திய பல்கலைக்கழத்தில் சேருவதற்கு என்பது குறிப்பிடத்தக்கது,