ஆம்னி பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 10 பேர் உடல் கருகி பலி!!
sleeper bus catches fire after collision with lorry: தொடர்ந்து, காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
கர்நாடகா, டிசம்பர் 25: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பேருந்து தீப்பிடித்ததன் காரணமாக, அதில் இருந்த 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் தீ மளமளவென பரவியதால், உள்ளே இருந்த பயணிகள் பலர் வெளியேற முடியாமல் தீக்காயமடைந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க : உ.பியில் கணவனை கொலை செய்து கிரைண்டரில் உடல் பாகங்களை அரைத்த மனைவி.. வெளியான பகீர் தகவல்
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்து:
Horrible accident Near Hiriyur along Bengaluru Hubballi highway, sleeper bus caught fire, 30+ feared dead! .#Busfire #chitradurga #karnataka #karnatakaNews #BusAccident #Hiriyur pic.twitter.com/J9wNxYIdYd
— Unmai Kasakkum (@Unmai_Kasakkum) December 25, 2025
ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைப் தடுப்புகளை தாண்டி, எதிர் திசையில் வந்த பெங்களூரிலிருந்து சிவமொக்கா நோக்கிச் சென்ற பேருந்து மீது மோதியுள்ளது. இந்த பயங்கர மோதலின் காரணமாக நொடிப்பொழுதில் பேருந்து நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால், பயணிகள் பலர் பேருந்தில் இருந்து வெளியேர முடியாமல் தவித்துள்ளனர். தொடர்ந்து, அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியுள்ளனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் ஹிரியூரிலும், 9 பேர் ஷிராவிலும், 3 பேர் தும்கூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : மாமாவின் கொலைக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த சிறுவன்.. பகீர் சம்பவம்!
டீசல் டேங்க் மீது மோதி பெரும் விபத்து:
மேலும் அவர் கூறும்போது, விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளை தாண்டி எதிர்திசையில் வந்த பேருந்தின் டீசல் டேங்கின் மீது மோதியுள்ளது. இதனால், டீசல் டேங்க் உடைந்ததோடு, அதில் இருந்து மளமளவென டீசல் வெளியானதில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது என்றார். விபத்துக்குள்ளான அந்த ஸ்லீப்பர் பேருந்தில், மொத்தம் 32 பயணிகள் இருந்துள்ளனர். இதில், 9 பயணிகளும், லாரி ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றனர்.
விபத்து குறித்து பேருந்தில் இருந்த பயணி கூறும்போது, விபத்து நடந்ததும், மேல் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த தான் கீழே விழுந்துவிட்டதாகவும், சுற்றிலும் தீப்பிடித்துக் கொண்டிருத்தாகவும், பேருந்தின் கதவுகளை திறக்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும், கண்ணாடியை உடைத்து வெளியேறியதாகவும், அந்த வழியே வந்தவர்கள் உடனடியாக தங்களை மீட்க உதவியதாகவும் தெரிவித்தார்.