ஓரினச்சேர்க்கை செயலி.. பிளஸ் 1 மாணவனுக்கு 2 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்த 14 பேர்.. பகீர் சம்பவம்!
11th Standard Student Tortured by 14 Men | கேரளாவை சேர்ந்த சிறுவனுக்கு ஓரினச்சேர்க்கை செயலி மூலம் அறிமுகமான 14 ஆண்கள் சிறுவனுக்கு 2 ஆண்டுகளாக தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாதிரி புகைப்படம்
காசர்கோடு, செப்டம்பர் 17 : கேரளாவில் (Kerala) பிளஸ் 1 மாணவனை 14 ஆண்கள் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச்சேர்க்கை செயலி மூலம் மாணவருக்கு அறிமுகமான அவர்கள், அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில், பிளஸ் 1 மாணவன் 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லைகளை எதிர்க்கொண்டு வந்தது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரினச்சேர்க்கை செயலியை பதிவிறக்கம் செய்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஓரினச்சேர்க்கை செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலி மூலம் அவருக்கு சில இளைஞர்கள் மற்றும் திருமணமான ஆண்கள் அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறுவனுடன் செயலி மூலம் தொடர்ப்புக்கொண்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த கும்பல் சிறுவனை கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள், வீடுகள் என பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. ஆனால், சிறுவன் தனக்கு நடைபெறும் இந்த கொடுமை குறித்து வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : பயங்கர நிலநடுக்கம்.. பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்.. குவியும் பாராட்டு!
வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்த நபர்
அந்த 14 பேர் சிறுவனுக்கு வெளி இடங்களில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சம்பவத்தன்று சிறுவனின் வீட்டிற்கே சென்ற நபர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்டு அவரது தாய் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் தப்பிச் சென்ற நிலையில், சிறுவனிடம் அது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் தொடர்பாக பகீர் தகவல்களை சிறுவன் தனது தாயிடம் அழுதுக்கொண்டே கூறியுள்ளார். இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : காட்டுக்குள் கேட்ட அழுகுரல்.. உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!
அதில் 21 வயது முதல் 51 வயது வரை உள்ள 14 ஆண்கள் சிறுவனுக்கு 2 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.