Health Tips: காரணமே இல்லாமல் அடிக்கடி சளி பிடிக்கிறதா? உடலில் இது இல்லாததுதான் காரணம்!

Frequent Cold Reason: ஒரு சிலருக்கு தினமும் ஏன் சளி பிடிக்கிறது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இது வெறும் வானிலை நிகழ்வு மட்டுமல்ல. பெரும்பாலும், நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கியமானவையாக பார்க்கப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Health Tips: காரணமே இல்லாமல் அடிக்கடி சளி பிடிக்கிறதா? உடலில் இது இல்லாததுதான் காரணம்!

அடிக்கடி சளி தொல்லையா?

Published: 

03 Dec 2025 18:36 PM

 IST

மழை (Monsoon) மற்றும் குளிர்காலத்தில் சளி மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும் சிலருக்கு இந்த பருவங்கள் மட்டுமின்றி, அனைத்து பருவங்களிலும் தினம் தினம் சளி தொல்லை சந்திக்கிறார்கள். இப்படியான பிரச்சனையை நீங்களும் சந்தித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். ஏனென்றால் உங்கள் உடல் ஒருவித குறைபாட்டைப் பற்றி எச்சரிக்கிறது என்று அர்த்தம். சிலர் இரவெல்லாம் நல்லா இருப்பார்கள், காலையில் தூங்கி எழுந்ததும் சளி பிரச்சனையை தினமும் எதிர்கொள்வார்கள். அதன்படி, சளி பிடித்தால் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் இந்த குறைபாடு பிரச்சனைகளை சரி செய்யவும்.

ஒரு சிலருக்கு தினமும் ஏன் சளி பிடிக்கிறது..?

ஒரு சிலருக்கு தினமும் ஏன் சளி பிடிக்கிறது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இது வெறும் வானிலை நிகழ்வு மட்டுமல்ல. பெரும்பாலும், நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கியமானவையாக பார்க்கப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாததே இதற்குக் காரணம். இந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிட்டால், உடல் வைரஸ் தொற்றுகளுக்கு, அதாவது சளி போன்றவை எளிதாக பாதிக்கும்.

ALSO READ: பருவ மாற்றத்தின்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படித் தடுப்பது?

எந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது காரணம்?

வைட்டமின் சி:

வைட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கியமானவை. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும், இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. அதாவது இது செல்லுலார் மட்டத்தில் உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. உங்கள் உடலில் வைட்டமின் சி இல்லாதபோது அடிக்கடி சளி, தாமதமாக காயம் குணமடைதல், ஈறுகளில் இரத்தப்போக்கு, அதிகப்படியான சோர்வு, வறண்ட தோல் போன்றவை தோன்றும்.

வைட்டமின் டி குறைபாடு:

வைட்டமின் டி பெரும்பாலும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு என்று நினைக்கிறோம். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் ஆழமான பங்கை வகிக்கிறது. இது நோயெதிர்ப்பு செல்களை செயல்படுத்துகிறது மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், உங்கள் உடலில் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் இருக்கலாம்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் அதிகபடியான சோர்வு, அடிக்கடி சளி மற்றும் இருமல், எலும்பு அல்லது முதுகு வலி, லேசான மனச்சோர்வு, தசை பலவீனம் போன்றவை ஏற்படலாம்.

துத்தநாகம்:

உடலில் துத்தநாகம் குறைவு குறித்து யாரும் கவலைப்படுவது கிடையாது. ஆனால் இது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமானது. துத்தநாகம் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் உதவுகிறது. இது உடலில் குறையும்போதும் அடிக்கடி சளி அல்லது தொற்று பிரச்சனைகள் உண்டாகும். இதனுடன், இரும்புச்சத்து குறைபாடு பெரும்பாலும் இரத்த சோகையுடன் தொடர்புடையது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் கணிசமாக பாதிக்கிறது. இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, ​​உடல் போதுமான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யாது. அதன்படி, ஆக்ஸிஜன் விநியோகத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மெதுவாக்குகிறது. இது வைரஸ்கள் தாக்குவதை ஏற்படுத்துகிறது.

ALSO READ: சர்க்கரை அளவு திடீரென ஏன் குறைகிறது..? இதை சரிசெய்வது எப்படி..?

இதை சரிசெய்வது எப்படி..?

துத்தநாகம், வைட்டமின் டி, வைட்டமின் சி போன்ற குறைபாட்டை சரிசெய்ய கீரை, பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம், பருப்பு வகைகள், பீன்ஸ், சோயாபீன்ஸ், ரெட் மீட், சிக்கன் கல்லீரல், முட்டை மற்றும் மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!