Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி வருவது ஏன்? இதுதான் முக்கிய காரணம்!
Pregnancy Morning Sickness: நாள் முழுவதும் வாந்தி (Vomiting), குமட்டல் மற்றும் தலை சுற்றல் போன்றவை எந்த நேரத்திலும் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் 10 பெண்களில் சுமார் 7-8 பேர் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். இது சற்று தொந்தரவாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் இது உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களால் ஏற்படுகிறது.
கர்ப்பத்தின் (Pregnancy) தொடக்க நாட்களில் பெரும்பாலும் பெண்களுக்கு காலையில் எழுந்ததும் காலை நேர குமட்டல் ஏற்படும். இதனை தொடர்ந்து, நாள் முழுவதும் வாந்தி (Vomiting), குமட்டல் மற்றும் தலை சுற்றல் போன்றவை எந்த நேரத்திலும் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் 10 பெண்களில் சுமார் 7-8 பேர் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். இது சற்று தொந்தரவாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் இது உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களால் ஏற்படுகிறது. அதன்படி, கர்ப்பத்தின் தொடக்க மாதங்களில் கர்ப்பிணி பெண்கள் காலை நேர குமட்டலை ஏன் சந்திக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
என்ன காரணம்..?
ஹார்மோன் ஏற்றம்:
கருத்தரித்த பிறகு உடலில் சில ஹார்மோன்களை வேகமாக அதிகரிக்கின்றன. குறிப்பாக hCG மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்றவை குழந்தைக்கு ஊட்டமளிக்கும் நஞ்சுக்கொடிய உருவாக்குகிறது. இதன் அளவுகள் முதல் 3 மாதங்களில் மிக அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன் மூளையின் வாந்தி எடுக்கும் பகுதியை இயக்குகிறது. இதனால்தான் தாளிப்பு, மற்ற வாசனைகள், சுவைகள் போன்றவற்றால் உடனடி குமட்டலை ஏற்படுத்தி வாந்தியாக வெளிப்படுகிறது. ஈஸ்ட்ரோஜனின் இந்த அதிகரிப்பு நமது வாசனை மற்றும் சுவை உணர்வையும் கூர்மைப்படுத்தும். இதன் காரணமாக, சாதாரண வாசனைகள் கூட சில நேரங்களில் தாங்க முடியாததாகி வாந்தியை வெளிப்படுத்துகிறது.
ALSO READ: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சலா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ சொல்லும் அட்வைஸ்!




செரிமான செயல்முறை:
கர்ப்பம் புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது. இது செரிமானத்தை மெதுவாக்குவதால், வாயு, அமிலத்தன்மை, வயிறு நிரம்பிய உணர்வு மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது. வயிறு உணவை மெதுவாக ஜீரணிக்கும்போது, ஒரு சிறிய அளவு உணவு கூட வாந்தியை ஏற்படுத்தும்.
வாசனை மற்றும் சுவை உணர்வு:
கர்ப்ப காலத்தில் உடலின் வாசனை உணர்வு திடீரென்று மிகவும் கூர்மையாகிறது. குழந்தையை பாதுகாக்க இதுவே உடலின் வழி. காரமான, கசப்பான உணவுகளுக்கு உடல் தானாகவே வேண்டாம் என்று கூறும். இது ஒரு வகையான இயற்கை எச்சரிக்கை அமைப்பு, இது தாய் மற்றும் குழந்தை என இருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
ALSO READ: பிறந்த குழந்தைக்கு பசும் பால் கொடுக்கலாமா? வேண்டாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
இயற்கை பாதுகாப்பு:
காலை நேர குமட்டல் குழந்தையை பாதுகாக்கும் ஒரு வழியாகும். குழந்தையின் உறுப்புகள் உருவாகும் ஆரம்ப மாதங்களில், தாயின் உடல் ஓய்வெடுக்க விரும்புகிறது. குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்கிறது. இதனால்தான் பசியின்மை மற்றும் குமட்டல் ஏற்படுகிறது.