Health Tips: மழைக்காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏன் ஏற்படுகிறது..? தடுப்பது எப்படி?

Frequent Urination Signs: உங்கள் சிறுநீரை உள்ளேயே அடக்கி வைக்கும் தவறைச் செய்யாதீர்கள். பாக்டீரியா வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க இது மிகவும் முக்கியமானது. அந்தரங்க உறுப்புகளில் எந்த ரசாயன அடிப்படையிலான பொருளையும் பயன்படுத்த வேண்டாம். இது அதிகபடியான எரிச்சலுடன் தொற்று பிரச்சனையை அதிகரிக்கும்.

Health Tips: மழைக்காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏன் ஏற்படுகிறது..? தடுப்பது எப்படி?

சிறுநீர் தொற்று

Published: 

04 Oct 2025 15:49 PM

 IST

சிறுநீர் தொற்று (Urine Infection) என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். மழைக்காலத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக பல பெண்கள் அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று பிரச்சனையை சந்திக்கிறார்கள். இது மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் அல்லது மாதந்தோறும் கூட ஏற்படலாம். இந்த தொற்று, பிறப்புறுப்புகளில் பாக்டீரியா வளர்ச்சியால் ஏற்படுகிறது. இது மோசமான சுகாதாரம் மற்றும் அதிகரித்த ஈரப்பதத்தால் தூண்டப்படுகிறது. மழைக்காலங்களில் (Rainy Season) UTI நோயாளிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. லேசான தொற்றுகள் பொதுவாக ஒரு வாரத்திற்குள் அல்லது ஆண்டிபயாடிக் மாத்திரைகளால் சரியாகிவிடும் என்றாலும் , UTI அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையை முறையாக வாழ்வதை கடினமாக்கினால், இந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியம்.

UTI தொற்று எவ்வாறு ஏற்படுகிறது?

பாக்டீரியா சிறுநீரில் நுழைந்து வளரவும் பரவவும் தொடங்கும் போது சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக, இந்த பாக்டீரியா தொற்று சிறுநீர்க் குழாயில் தொடங்கி சிறுநீர் பாதை வரை செல்கிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த தொற்று சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும்.

ALSO READ: நீண்ட நேரம் அமர்ந்திருப்பது நுரையீரலை சுருங்கச் செய்யுமா? எச்சரிக்கும் நிபுணர்கள்

மழைக்காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி?

மழைக்காலம் மட்டுமின்றி எந்த பருவ காலமாக இருந்தாலும், பெண்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதை எளிதாக்குகிறது. நீங்கள் அடிக்கடி சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் அவதிப்பட்டால், மது, காபி, சோடா ஆகியவற்றை குடிப்பது முக்கியம். ஏனெனில், இவை ஆபத்தை அதிகரித்து சிறுநீர்ப்பை எரிச்சலைத் தூண்டும்.

உங்கள் சிறுநீரை உள்ளேயே அடக்கி வைக்கும் தவறைச் செய்யாதீர்கள். பாக்டீரியா வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க இது மிகவும் முக்கியமானது. அந்தரங்க உறுப்புகளில் எந்த ரசாயன அடிப்படையிலான பொருளையும் பயன்படுத்த வேண்டாம். இது அதிகபடியான எரிச்சலுடன் தொற்று பிரச்சனையை அதிகரிக்கும். மழைக்காலத்தில் எப்போதும் உங்கள் உள்ளாடைகளை அயர்ன் செய்து அணிவது பாதுகாப்பானது. மேலும், உள்ளாடைகள் மென்மையான பருத்தியால் செய்யப்பட்டவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ALSO READ: உடலில் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அனைத்தும் புற்றுநோயின் ஆரம்ப கட்டம்!

பொது இடங்களில் எப்போதும் இந்திய கழிப்பறையைப் பயன்படுத்துங்கள். வெஸ்டன் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை நன்கு கிருமி நீக்கம் செய்ய பின்னர் அமருங்கள். உங்கள் அந்தரங்க உறுப்புகளை கழிப்பறை காகிதத்தால் துடைக்கும் திசையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். சிறுநீர்க்குழாயிலிருந்து யோனிக்கு பாக்டீரியா பரவுவதைத் தடுக்க முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக துடைப்பது அவசியம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)