Women’s Health: பெண்களுக்கு வெள்ளைப்படுதலின்போது இந்த பிரச்சனையா? டாக்டரை உடனே பாருங்க!

White Discharge: வெள்ளை வெளியேற்றத்தின் அளவு அதிகரித்து, மஞ்சள், பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் மாறி, அது துர்நாற்றம் வீசத் தொடங்கினால், அது ஒரு தொற்று அல்லது நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனுடன் யோனியில் அரிப்பு, எரிச்சல் அல்லது வலி போன்றவை ஏற்பட்டால் கவனமுடன் இருப்பது நல்லது. 

Womens Health: பெண்களுக்கு வெள்ளைப்படுதலின்போது இந்த பிரச்சனையா? டாக்டரை உடனே பாருங்க!

பெண்கள் ஆரோக்கியம்

Published: 

20 Nov 2025 18:45 PM

 IST

பெண்களில் வெள்ளைப்படுதல் என்பது ஒரு பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நிகழ்வாகும். பெண்களுக்கு ஏற்படும் இவற்றை மருத்துவ ரீதியாக லுகோரியா என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை வெளியேறுதல் என்பது யோனியை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும், தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. பெரும்பாலான பெண்களில், இது மாதவிடாய்க்கு (Menstruation) முன்போ பின்போ அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு இது பொதுவாக ஏற்படும். இதுமட்டுமின்றி பெண்களுக்கு மன அழுத்தம் (Mental Pressure) , பலவீனம் அல்லது தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

வெள்ளைப்படுதல் வெளியேற்றத்தின்போது துர்நாற்றம், அரிப்பு அல்லது நிற மாற்றம் போன்றவை இல்லாதது முற்றிலும் இயல்பானது. மேலும்,இது உடல் ஆரோக்கியம் சரியாக இருப்பதையும் குறிக்கும். இருப்பினும், சில நேரங்களில் பெண்களில் வெள்ளைப்படுத்தல் வெளியேற்றம் பிரச்சனையாக மாறும். எனவே, பெண்களில் வெள்ளை வெளியேற்றம் எப்போது பிரச்சனையாக மாறும் என்பதை தெரிந்து கொள்வோம்.

நிற மாற்றம்:

வெள்ளை வெளியேற்றத்தின் அளவு அதிகரித்து, மஞ்சள், பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் மாறி, அது துர்நாற்றம் வீசத் தொடங்கினால், அது ஒரு தொற்று அல்லது நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனுடன் யோனியில் அரிப்பு, எரிச்சல் அல்லது வலி போன்றவை ஏற்பட்டால் கவனமுடன் இருப்பது நல்லது. பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற பிரச்சனைகளில், வெளியேற்றம் மெல்லியதாகவும், துர்நாற்றம் ஏற்படும். தொடர்ந்து, வெள்ளைப்படுத்தல் வெளியேற்றம் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் தோன்றும். இது, பூஞ்சை தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

ALSO READ: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிகரிக்கும் உடல் எடை.. காரணம் என்ன?

வெள்ளைப்படுத்தலுக்கான பொதுவான காரணங்கள்:

ஹார்மோன் மாற்றங்கள்:

அண்டவிடுப்பின் பின்னர் புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பது யோனியில் இருந்து வெள்ளை வெளியேற்றத்தை ஏற்படுத்தும்.

கர்ப்பம்:

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் வெள்ளை வெளியேற்றத்தை ஏற்படுத்தும்.

ஈஸ்ட் தொற்று:

ஈஸ்டின் அதிகப்படியான வளர்ச்சி பெண்களில் வெள்ளை வெளியேற்றத்தை ஏற்படுத்தும்.

பாக்டீரியா வஜினோசிஸ்:

யோனி பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வும் வெள்ளை வெளியேற்றத்தை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை:

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஹார்மோன் அளவை தற்காலிகமாக பாதிக்கும், இது பெண்களில் வெள்ளை வெளியேற்றத்தை ஏற்படுத்தும்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம்..? மருத்துவர் நான்சி அட்வைஸ்..!

எப்போது மருத்துவரை சந்திப்பது நல்லது..?

  • வெள்ளைப்படுதலுடன் அரிப்பு, எரிதல் அல்லது துர்நாற்றத்துடன் இருந்தால், நீங்கள் அதை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
  • வெள்ளைப்படுதல் ஏற்படும்போது துர்நாற்றமோ அல்லது நுரை போல் வெளிப்பட்டால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
  • வெளியேற்றம் மஞ்சள், பச்சை அல்லது பழுப்பு நிறமாக இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
  • வெள்ளை வெளியேற்றத்தின்போது தோல் அழற்சி ஏற்பட்டாலும் மருத்துவரிடம் செல்லுங்கள்.

வெள்ளைப்படுதல் ஏற்படும்போது என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

  • வெள்ளைப்படுதலின்போது தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க, பெண்கள் தினமும் தங்கள் யோனியைச் சுத்தம் செய்து, செயற்கை துணிகளுக்குப் பதிலாக பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும்.
  • ஈரமான துணிகளையோ அல்லது பேன்டி லைனர்களையோ நீண்ட நேரம் அணியக்கூடாது.
  • தனிப்பட்ட பாகங்களை உலர்ந்ததாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?
2,860 கி.மீ நீளமுள்ள டானூப் நதி.. 10 நாடுகள் வழியாக பாயும் ஒரே நதி..
இறந்தவர்கள் உடலில் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து உறுப்பு தானம் செய்த மருத்துவர்கள்.. ஆசியாவிலேயே புதிய முயற்சி!!
கூகுளின் டிரைவர் இல்லாமல் இயங்கும் காரால் பறிபோன பூனையின் உயிர்