Diwali Health Tips: தீபாவளி நாளில் கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.. இது குழந்தைக்கு பாதுகாப்பை தரும்!
Diwali Safety Tips for Pregnant Women: பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் புகை மற்றும் ரசாயனங்கள் காற்றில் உள்ள கார்பன் துகள்களை அதிகரிக்கின்றன. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் ஓரளவு பாதிக்கலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

கர்ப்பிணி பாதுகாப்பு
தீபாவளி (Diwali) ஒரு மகிழ்ச்சியான பண்டிகையாகும். இருப்பினும், இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு பிரச்சனை அதிகரிக்கிறது. தீபாவளி போன்ற நாட்களில் மக்கள் இனிப்பு மற்றும் காரம் என அதிகமாக சாப்பிட தொடங்குகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். தீபாவளியின் போது கர்ப்பிணிப் பெண்களும் (Pregnant Woman) தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். புகை, அதிக சத்தம் மற்றும் இனிப்புகளை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்தானதாக மாறும். இந்த பண்டிகை காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நலத்தில் ஏன் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
என்ன செய்ய வேண்டும்..?
பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் புகை மற்றும் ரசாயனங்கள் காற்றில் உள்ள கார்பன் துகள்களை அதிகரிக்கின்றன. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் ஓரளவு பாதிக்கலாம். தீபாவளி பண்டிகையின் போது கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முகக்கவசம் (Face Mask) அணியுங்கள் . இந்த நேரத்தில் உங்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இந்த விஷயத்தில் எக்காரணத்தை கொண்டும் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிக இனிப்பு சாப்பிட வேண்டாம்:
கர்ப்பிணிப் பெண்கள் தீபாவளியன்று இனிப்புகளை உண்ணலாம். ஆனால் அளவுடன் சாப்பிடுவது முக்கியம். இதற்கு காரணம், கர்ப்ப காலத்தில் சீரான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க வேண்டும். அதிகப்படியான இனிப்புகள் கர்ப்பகால சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக அதிக எடை கொண்ட பெண்கள் அல்லது சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்கள் குறைவான அளவில் இனிப்புகளை உட்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், அதிக வறுத்த அல்லது காரமான உணவுகளை சாப்பிடுவதையும் குறைத்துகொள்ள வேண்டும். மேலும், தீபாவளி நாள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பரிசோதனை ஏன் முக்கியம்? எதை சாப்பிடலாம்..?
மன அழுத்தம் மற்றும் சோர்வை விலக்கி வையுங்கள்:
தீபாவளி போன்ற நல்ல நாட்களில் சுத்தம் செய்தல், பூஜைக்குத் தயாராகுதல், விருந்தினர்களுக்குப் பரிமாறுதல் போன்றவற்றிலிருந்து சோர்வாக இருப்பது இயல்பானது. இருப்பினும், இதுபோன்ற நாட்களில் கர்ப்பிணிப் பெண்கள் போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு பெறுவது முக்கியம். நீங்கள் மன அழுத்தம் அல்லது சோர்வாக உணர்ந்தால், ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு தியானம் செய்து அமைதி கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் அதிக மன அழுத்தத்தை எதிர்கொண்டால் உங்கள் மருத்துவரை அணுகி தீர்வு பெற முயற்சி செய்யுங்கள்.