தினமும் 7,000 அடிகள் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரிய தகவல்!
Health Benefits of Walking : நடைபயிற்சியின் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடப்பது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
நடைபயிற்சி (Walking) என்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பதில் குழப்பங்கள் நிலவுகின்றன. சிலர் 10,000 அடிகள் நடக்கவேண்டும் என்கிறார்கள், சிலர் 7,000 அடிகள் நடந்தால் போதும் என்கிறார்கள். இந்த குழப்பத்திற்கு விடையளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியா (Australia), இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே, சிட்னி பல்கலைக்கழகம் உட்பட, ஆராய்ச்சியாளர்கள் இவை அனைத்திற்கும் ஒரு புதிய பதிலைக் கண்டுபிடித்துள்ளனர். நீங்கள் ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நடைபயிற்சி பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளியாகியுள்ளன. 7,000 அடிகள் நடப்பது ஆரோக்கியத்தைப் மேம்படுத்துவதோடு பல ஆபத்தான பிரச்னைகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்காக கடந்த 2014 முதல் 2025 ஆண்டு வரை 1.6 லட்சம் பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, ஒரு நாளைக்கு 7,000 படிகள் நடப்பவர்களுக்கு மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வயிற்று கொழுப்பைக் குறைக்க சைக்கிள் ஓட்டுவதா அல்லது ஓடுவதா?
இதயத்திற்கு பாதுகாப்பு
7,000 அடிகள் நடப்பது இதய ஆரோக்கியத்தை ]பாதுகாக்கும். இதய நோய் அபாயம் 25 சதவீதம் குறைகிறது. இதயம் தொடர்பான காரணங்களால் ஏற்படும் இறப்பு ஆபத்து 47 சதவீதம் குறைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த நடைபயிற்சி எந்த காரணத்தினாலும் ஏற்படும் இறப்பு அபாயத்தை பாதியாகக் குறைக்கிறது. இதன் பொருள் ஒட்டுமொத்த இறப்பு அபாயத்தை 47 சதவீதம் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோய் மற்றும் நீரிழிவு அபாயங்களிலிருந்து பாதுகாப்பு
தினமும் நடப்பவர்களுக்கு புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பு 34 சதவீதம் குறைவு என்று கூறப்படுகிறது. மேலும், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 14 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது டிமென்ஷியா அபாயத்தை 38 சதவீதம் குறைக்கிறது. மனச்சோர்வு ஏற்படும் அபாயமும் 22 சதவீதம் குறைக்கப்படுகிறது.
இதையும் படிக்க : சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஆச்சரிய தகவல்
இந்த நடைப் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. செலவழிக்க எதுவும் இல்லை. தினமும் 5–6 கிலோமீட்டர் நடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற எளிதான பயிற்சி என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது ஒரு சிறிய சாதனையாகத் தோன்றலாம், ஆனால் அதன் நன்மைகள் மிகப்பெரியவை. இது நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மனதையும் வலுவாக வைத்திருக்க ஒரு எளிய வழி. எனவே, தினமும் நடப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.