Health Tips: உணவில் கூடுதல் உப்பு சேர்த்து சாப்பிடும் நபர்களா நீங்கள்..? இது உங்கள் உடலில் என்ன செய்யும் தெரியுமா?
Health risks of salt: உப்பு (சோடியம் குளோரைடு) உணவின் சுவையை அதிகரிக்கிறது என்றாலும், அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் இதயம், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை பாதிக்கும். அயோடின் கலந்த உப்பு தைராய்டு ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. சரியான அளவு உப்பை உட்கொள்ளுவது ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம்.

உப்பு பயன்பாடு
உணவின் சுவையை அதிகரிப்பதிலும், அதன் சுவையை கெடுப்பதிலும் உப்பு (Salt) ஒரு சிறப்பு பங்கை வகிக்கிறது. சரியான அளவு மற்றும் சரியான வகையான உப்பை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமாக (Health) இருக்கலாம். இருப்பினும், உப்பை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலமும், சுத்திகரிக்கப்படாத தவறான உப்பை சாப்பிடுவதன் மூலம், பல பிரச்சனைகள் உங்கள் உடம்பில் ஏற்படலாம். எலும்பு வலி (Bone Pain) முதல் அதிகரித்த இரத்த அழுத்தம் வரை அனைத்திற்கும் உப்பு காரணமாக இருக்கலாம். இந்தநிலையில், உப்பை தூவி சாப்பிடும் நபர்களுக்கு இந்த விரிவான விளக்கம் முக்கியமானது.
சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படும் உப்பில், 40 சதவீதம் சோடியமும், 60 சதவீதம் குளோரைடும் உள்ளது. சுவையை கூட்டும் உப்பை அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்ளுவது ஆபத்தானது. எனவே, நீங்கள் இன்னும் உங்கள் உணவின் மேல் உப்பை தூவி சாப்பிட்டால், நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.
ALSO READ: உடலில் உப்புச்சத்து குறைந்தால் என்ன நடக்கும்..? இவ்வளவு பிரச்சனைகள் உண்டாகுமா?
உப்பு பயன்பாட்டில் இந்தியாவின் நிலை என்ன..?
அதிகப்படியான உப்பு உட்கொள்வது பல உடல்நலக் கோளாறுகள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் சிறுநீரகங்கள் முதல் இதயம் வரை முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், இந்தியா உப்பு அதிகமாக பயன்படுத்தவதாக கூறப்படுகிறது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியர்கள் அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள். உண்மையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சராசரியாக தினசரி உப்பு உட்கொள்ளல் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 5 கிராமை விட மிக அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. ஆண்டுதோறும் 1.89 மில்லியன் இறப்புகள் சோடியம் தொடர்பான சுகாதார பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என்றும் உலக சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.
அதிகப்படியான சோடியம் உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது..?
சோடியம் பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இதனால் ஏற்படும் தீய விளைவுகள் மெதுவாக ஆட்கொள்ள தொடங்கும். அதாவது, சங்கிலி எதிர்வினை மூலம் உடலை பாதிக்கிறது. மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் செயல்பாடு இறுதியில் ஒன்றோடோன்று தொடர்புடையதாக இருப்பதால், சோடியம் பல உறுப்புகள் மற்றும் அமைப்புகளை பாதிக்கிறது.
ALSO READ: 30 நாட்கள் வெள்ளை சர்க்கரையை நிறுத்தி பாருங்க.. உடலில் இந்த ஆரோக்கிய மாற்றங்கள் நிகழும்!
அயோடின் கலந்த உப்பு:
அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது உண்மையில் சரியானதா..? ஆம், நீங்கள் அயோடின் நிறைந்த உப்பை குறைந்த அளவில் உட்கொண்டால், அது பல நன்மைகளை தரும். பல வீடுகளில் பயன்படுத்தப்படும் அயோடின் கலந்த உப்பு தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கும், மன அழுத்த நிவாரணத்திற்கும், முடி, பற்கள், தோல், நகங்கள் மற்றும் மூளைக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், அதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தும்.