Health Tips: கீரையை எப்போது சாப்பிடக்கூடாது..? எவ்வளவு நேரம் சமைப்பது நல்லது..?

How Do You Eat Spinach: கீரையை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்ளாமல் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். அதிகளவில் எடுத்துகொள்வது உடலுக்கு சில பிரச்சனைகளை தரும். சில கீரைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

Health Tips: கீரையை எப்போது சாப்பிடக்கூடாது..? எவ்வளவு நேரம் சமைப்பது நல்லது..?

கீரையின் நன்மைகளை பெறுவது எப்படி?

Published: 

25 Nov 2025 15:29 PM

 IST

கீரை என்பது ஒரு பச்சை இலை காய்கறியாகும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் வாரத்திற்கு ஒருமுறையாவது கீரையை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கிறார்கள். நம்மில் பெரும்பாலானோருக்கு கீரை (Spinach) பிடிக்கும் என்றாலும் கீரையை எப்படி சாப்பிடுவது, எந்த அளவிற்கு சமைக்க வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பது தெரியாது. அதாவது, நீங்கள் கீரையை சரியான நேரத்தில், சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால், அதிலிருந்து முழு நன்மைகளையும் உங்களால் பெற முடியாது. அதேநேரத்தில், தவறான நேரத்தில் சாப்பிடும் கீரையானது உங்கள் ஆரோக்கியத்தில் (Health) சிக்கல்களை உண்டாக்கலாம். அந்தவகையில், கீரையை எப்போது சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது சரியா தவறா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

கீரையை எப்போது சாப்பிடக்கூடாது..?

கீரைகளில் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பல்வேறு ஊட்டச்சத்து உள்ளன. இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, கீரையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஜீரணிக்க கடினமாக இருப்பதால், இரவு உணவில் கீரையை சாப்பிடக்கூடாது. இந்த நேரத்தில் செரிமானம் இயற்கையாகவே மெதுவாக இருக்கும். இரவில் கீரை சாப்பிடுவது வீக்கம் மற்றும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.

குறைந்த அளவில் கீரைகள் ஏன் நல்லது..?

கீரையை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்ளாமல் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். அதிகளவில் எடுத்துகொள்வது உடலுக்கு சில பிரச்சனைகளை தரும். சில கீரைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நல்ல செரிமானத்திற்கு நார்ச்சத்து அவசியம். ஆனால், அதிகப்படியான நார்ச்சத்து அஜீரணத்தை ஏற்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் அதிக நார்ச்சத்து எடுத்துகொள்ளும்போது காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம்.

அதிகமாக கீரை சாப்பிடுவது சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கீரையில் உள்ள கரிமப் பொருட்கள் யூரிக் அமிலமாக மாறுகின்றன. இது சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ALSO READ: மழைக்காலத்தில் மிளகின் அதீத பயன்கள்.. சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும்..!

கீரையை அதிகமாக சமைக்கக்கூடாதா..?

நீங்கள் கீரையை அதிகநேரம் சமைப்பவராக இருந்தால், இதை முதலில் தவிர்க்கவும். கீரையை அதிகநேரம் சமைப்பது அதன் ஊட்டச்சத்துக்களை அழித்து, அதில் உள்ள அனைத்து கால்சியத்தையும் நீக்கிவிடும். அதேநேரத்தில், கீரைகளை பச்சையாகவும் சாப்பிடக்கூடாது. பூச்சிகளிடமிருந்து இந்தப் பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பெரும்பாலும் ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, பச்சையாக கீரையை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..