Leg Shaking: உங்களுக்கும் கால்களை ஆட்டும் பழக்கம் இருக்கா..? அப்படியானால் இதை மனதில் கொள்ளுங்கள்..!
Restless Legs Syndrome: உட்கார்ந்திருக்கும்போது கால்களை அசைக்கும் பழக்கம், இரும்புச்சத்து குறைபாடு அல்லது ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தம், ADHD போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதய நோய்களுக்கான அபாயத்தையும் இது அதிகரிக்கலாம். போதுமான ஓய்வு, மசாஜ் மற்றும் சரியான சிகிச்சை அவசியம்.

உட்கார்ந்திருக்கும்போது கால்களை அசைப்பது (Leg Shaking) என்பது பல நபர்களிடம் காணப்படும் ஒரு பொதுவான பழக்கமாகும். பலர் உட்கார்ந்திருக்கும்போது, தூங்கும்போது, சிந்திக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் (Depression) இருக்கும்போது தங்கள் கால்களை அசைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒருவேளை நீங்களும் இந்த பழக்கத்தை கொண்டிருக்கலாம். இந்த பழக்கத்தை ஒரு சாதாரண பழக்கமாக கருதி நீங்கள் புறக்கணிக்கலாம். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த பழக்கம் இரும்புச்சத்து (Iron Deficiency) குறைப்பாட்டால் ஏற்படக்கூடிய அமைதியற்ற நோய்க்குறிகளின் அறிகுறியாக இருக்கலாம். இது நரம்பு மண்டலம் தொடர்பான ஒரு நோய் என்றும், ஒருவர் கால்களை அசைக்கும்போது டோபமைன் ஹார்மோன் சுரப்பதால், அதை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். இதை பற்றி விவரமாக தெரிந்துகொள்வோம்.
உட்கார்ந்திருக்கும்போது கால் ஆட்டும் பழக்கம் அடிப்படை உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சில நேரங்களில் தொடர்ச்சியான கால் அசைவு, கால்களை நகர்த்துவதற்கான தவிர்க்கமுடியாத தூண்டுதலால் வகைப்படுத்தப்படும் ஒரு நரம்பியல் கோளாறான ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோமின் அறிகுறியாக இருக்கலாம். அதிகப்படியான கால் ஆட்டும் பழக்கம் சில நேரங்களில் அதிகரித்த பதட்டம் அல்லது மன அழுத்தம் தொடர்பான கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) உள்ளவர்கள், கவனத்தை பராமரிப்பதிலும் அசையாமல் இருப்பதிலும் சிரமப்படுவதால், கால் நடுக்கம் உள்ளிட்ட நிலையற்ற நடத்தையை வெளிப்படுத்தலாம். இதுபோன்ற சரியான நோயறிதலுக்கு உங்கள் மருத்துவரை அணுகி, கண்டறிவது நல்லது.
மன அழுத்தம்:
பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவ பள்ளியில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகிறது. Restless Legs Syndrome உள்ள ஒருவர் தூக்குவதற்கு முன்பு தனது கால்களை 200 முதல் 300 முறை அசைத்திருப்பார். இது இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை அதிகரிக்கிறது. அதன்படி, இது இதய நோய்களுக்கு அதாவது இருதய நோய்களுக்கு மிகப்பெரிய காரணமாகிறது. இருப்பினும், பல மருத்துவர்கள் இந்த பிரச்சனையை மரபணு காரணங்களால் பெறுவதாக கூறுகின்றனர்.




சில சூழ்நிலைகளில், கால்களை அசைப்பது சலிப்பு அல்லது ஈடுபாடு இல்லாமையைக் குறிக்கலாம். மனம் அலைபாயும் போது அல்லது ஆர்வமில்லாமல் இருக்கும்போது, உடல் தன்னைத் திசைதிருப்ப ஒரு வழியைத் தேடலாம், இது இந்த தொடர்ச்சியான இயக்கத்திற்கு வழிவகுக்கும். இது மன அழுத்தமாக இருந்தால், காரணத்தை நிவர்த்தி செய்வதும், யோகா அல்லது சுவாசப் பயிற்சிகள் போன்ற அமைதிப்படுத்தும் அதிக கவனமுள்ள வழிகளைக் கண்டறிவதும் உதவக்கூடும்.
இந்த நோயை கண்டறிய குறிப்பிட்ட சோதனை எதுவும் இல்லை என்றாலும், பல மருத்துவர்கள் இரத்த பரிசோதனைகள் மூலம் அதன் அறிகுறிகளை கண்டறிகின்றனர். இதை தவிர்க்க, கால்களுக்கு ஓய்வு கொடுத்து, கால்களை தவறாமல் மசாஜ் செய்வது மிக முக்கியம். மேலும், சூடான குளியலுடன் போதுமான தூக்கத்தை பெறுவதும் முக்கியம்.