Health Tips: டயட், உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த தவறுகளே காரணம்!

Weight Loss Mistakes: நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், பலரும் எடையை குறைக்க சில பொதுவான தவறுகளை செய்கிறார்கள். இதனால், எடையை குறைக்க முடியாமல் தவிக்கிறார்கள். அந்தவகையில், எடையை குறைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

Health Tips: டயட், உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த தவறுகளே காரணம்!

உடல் எடை குறைப்பு

Published: 

06 Feb 2026 16:19 PM

 IST

எடை குறைப்பது (Weight Loss) எவ்வளவு சவாலானதோ, அவ்வளவு கடினமானது. எடை குறைப்பின்போது குறைவாக சாப்பிட்டுவிட்டு அதிகமாக உடற்பயிற்சி செய்வது எப்போதும் வேலைக்கு ஆகாது. பலர் பல ஆண்டுகளாக உணவுமுறைகள், உடற்பயிற்சிகள் (Exercises) மற்றும் பல திட்டங்களை முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், இது பெரியளவில் பலனை தராது. அந்தவகையில், நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், பலரும் எடையை குறைக்க சில பொதுவான தவறுகளை செய்கிறார்கள். இதனால், எடையை குறைக்க முடியாமல் தவிக்கிறார்கள். அந்தவகையில், எடையை குறைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ALSO READ: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர்.. தலை முதல் கால் வரை இவ்வளவு நன்மைகளா?

காலை உணவை தவிர்த்தல்:

பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக காலை உணவை தவிர்த்து வருகிறார்கள். ஆனால், இது எடை குறைப்புக்கு உதவாது. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், தசை வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவுகிறது. எனவே, காலை உணவை தவிர்ப்பது தவறான செயலாகும்.

குறைந்த கார்ப் உணவுகள்:

உடல் எடை வேகமாக குறைய வேண்டும் என்பதற்காக பலரும் குறைந்தளவில் கார்ப் உணவுகள், க்ராஷ் டயட் போன்ற ஃபேட் டயட்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது உங்களுக்கு சோர்வு, தசை இழப்பு மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றம் ஏற்படும். இதனால், எடை அதிகரிக்குமே தவிர, எடை குறையாது.

அதிவேகமாக சாப்பிடுதல்:

மிக விரைவாக சாப்பிடுவது மூளையின் வயிறு நிரம்பியதற்கான சமிக்ஞையை தாமதப்படுத்தும். இது அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு வாய் சாப்பிடும்போது நன்கு மென்று சாப்பிட வேண்டும். இது சரியான நேரத்தில் வயிறு நிரம்பிய உணர்வை தந்து, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.

வெளி உணவுகளை சாப்பிடுதல்:

சில நேரங்களில் மக்கள் பெரும்பாலும் சமைப்பதற்கு சோம்பேறித்தனம் கொண்டு துரித உணவுகளை தேடி சாப்பிடுக்கிறார்கள். அதன்படி, வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிடுவது உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவு.

ALSO READ: திடீரென அதிகரிக்கும் இதய துடிப்பு.. நாக்கு, வாய் வறட்சி.. உடலில் இந்த குறைபாடாக இருக்கலாம்!

ஸ்நாக்ஸ்:

குளிர் பானங்கள், சிப்ஸ் அல்லது இனிப்பு நிறைந்த ஸ்நாக்ஸ் போன்றவை எளிதாக கிடைக்கிறது. இவற்றை எடுத்து கொள்வதும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். எனவே, பழங்கள், நட்ஸ் மற்றும் ஆரோக்கியமான ட்ரை ப்ரூட்ஸ்களை சாப்பிடுவது நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நீங்கள் உண்ணும் உணவின் அளவு மற்றும் நீங்கள் உண்ணும் உணவின் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது சமமாக முக்கியம்.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்