Heart Attack: இந்தியாவில் அச்சுறுத்தும் மாரடைப்பு.. இந்த 4 பழக்கவழக்கங்களே அதிகரிக்க முக்கிய காரணம்!

Prevent Heart Attack: இந்தியாவில் கடந்த 2014 முதல் 2019 வரை மாரடைப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு நகரமயமாக்கல், மாறிவரும் வாழ்க்கை முறைகள், மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Heart Attack: இந்தியாவில் அச்சுறுத்தும் மாரடைப்பு..  இந்த 4 பழக்கவழக்கங்களே அதிகரிக்க முக்கிய காரணம்!

மாரடைப்பு

Published: 

07 Nov 2025 16:44 PM

 IST

இந்தியாவில் நாளுக்கு நாள் இதய நோய் (Heart Disease) காரணமாக இறப்பு சதவீதம் அதிகரிட்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2014 முதல் 2019 வரை மாரடைப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு நகரமயமாக்கல், மாறிவரும் வாழ்க்கை முறைகள், மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், புகைபிடித்தல் (Smoking) மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை ஆரோக்கியத்துடன் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரம், குடும்பம் மற்றும் வேலை வாழ்க்கையையும் பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில், மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது.? மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?

இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஒரு உறைவு அல்லது தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இது இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் சென்றடைவதை தடுக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறப்படாவிட்டால், அது ஆபத்தானது. பெரும்பாலும் மாரடைப்புகள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்புகள் திடீரென்று ஏற்படுவதில்லை. இவை ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீ, உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

ALSO READ: தினமும் ஒரு வேகவைத்த முட்டை.. சரியாகும் புரதச்சத்து குறைபாடு..!

இவைகள் ஏன் ஆபத்தானது..?

உயர் இரத்த அழுத்தம் :

நீண்ட காலமாக உடலில் இருக்கும் உயர் இரத்த அழுத்தம் தமனிகளின் சுவர்களை சேதப்படுத்தும்.

கொழுப்பு:

இரத்தத்தில் எல்.டி.எல் கொழுப்பு அதிகரிப்பதால், தமனிகளில் கொழுப்பு படிவுகள் உருவாகின்றன. இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.

இரத்த சர்க்கரை அல்லது சர்க்கரை நோய்:

அதிகரித்த சர்க்கரை இரத்த அணுக்களை பலவீனப்படுத்தி, இதய நோய் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.

புகைபிடித்தல்:

புகைபிடித்தல் இதயம் மற்றும் தமனிகள் இரண்டையும் சேதப்படுத்துகிறது. எனவே, இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

ALSO READ: ஆரோக்கியமான சியா விதைகள்.. இந்த பிரச்சனை இருந்தால் தவிருங்கள்!

மாரடைப்பு அபாயத்தை எவ்வாறு குறைப்பது?

ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மாரடைப்பு அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். இதனுடன் பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமானவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். கூடுதலாக, தினமும் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி அல்லது யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி அவசியமானது. முடிந்தவரை புகையிலையை உடனடியாக நிறுத்துவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதன் மூலம், மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே சிகிச்சையை பெறுவது நல்லது. குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு உள்ளவர்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.