ORS Powder Benefits: ORS என்றால் என்ன? இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை எப்படி தருகிறது?

Oral Rehydration Salts: மழைக்காலத்தில் சுத்தமில்லாத தண்ணீர் அருந்துவது உங்களுக்கு வயிற்றுபோக்கை ஏற்படுத்தலாம். இதனால், உங்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி உடலை நீர்ச்சத்து இழப்பது மட்டுமல்லாமல், உப்புகள் மற்றும் தாதுக்களையும் குறைக்கிறது. உடலில் உப்பு மற்றும் சர்க்கரை இல்லாததால் அவர்கள் தலைச்சுற்றல் மற்றும் பலவீனமாக உணர செய்யும்.

ORS Powder Benefits: ORS என்றால் என்ன? இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை எப்படி தருகிறது?

ORS நன்மைகள்

Published: 

20 Sep 2025 17:17 PM

 IST

மழைக்காலம் மேலும் மேலும் தீவிரமடைந்து வருவதால், ஒவ்வொரு விஷயத்தை மிகவும் கவனமுடன் கையாள்வது முக்கியம். மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் தண்ணீரை மாற்றி குடிப்பது தலைச்சுற்றல், வாந்தி (Vomit), வயிற்றுப்போக்கு (Diarrhea) மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். அதன்படி, இந்த பிரச்சனையை சரிசெய்ய மருத்துவர்கள் முதல் பலரும் ORS ஐ பரிந்துரைக்கிறார்கள். இது உடலை நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், உடலை மீண்டும் நீரேற்றப்படுத்தவும் உதவுகிறது. ORS என்பது உப்பு, சர்க்கரை மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் (Oral Rehydration Salts) கலவையாகும், இது உடலை மீண்டும் நீரேற்றப்படுத்த உதவுகிறது. இந்தநிலையில், உடலை நீரேற்றமாக உதவும் ORS இன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தலைவலியுடன் இந்த 5 அறிகுறிகளா..? உடனடியாக மருத்துவரை நாடுங்கள்..!

ORS இன் பயன் என்ன..?

மழைக்காலத்தில் சுத்தமில்லாத தண்ணீர் அருந்துவது உங்களுக்கு வயிற்றுபோக்கை ஏற்படுத்தலாம். இதனால், உங்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி உடலை நீர்ச்சத்து இழப்பது மட்டுமல்லாமல், உப்புகள் மற்றும் தாதுக்களையும் குறைக்கிறது. உடலில் உப்பு மற்றும் சர்க்கரை இல்லாததால் அவர்கள் தலைச்சுற்றல் மற்றும் பலவீனமாக உணர செய்யும். ORS கலந்த தண்ணீர் குடிப்பது ஆற்றலை வழங்கும் உப்புகள், சர்க்கரைகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை வழங்குகிறது.

அதன்படி, பொதுவான வயிற்றுப்போக்கு அல்லது லேசான வாந்தி ஏற்பட்டால், ORS மட்டும் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலான மக்கள் எந்த மருந்தும் இல்லாமல் குணமடைவார்கள். ஆனால் வயிற்றுப்போக்கு தொடர்ந்து இருந்தால், வயிற்று வலி இருந்தால், வயிற்றுப்போக்குடன் இரத்தம் வெளியேறினால், ORS மட்டும் வேலை செய்யாது. அப்போது, நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

நிலைமை மிகவும் மோசமாக இல்லாதபோது, ​​வயிற்றுப்போக்கு லேசானதாக இருந்தால், உடல் நீரிழப்பு இல்லாதபோது, ​​மயக்கம் போன்ற அறிகுறிகளை நபர் அனுபவிக்கத் தொடங்கினால், ORS மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் நீங்கள் லேசான எளிய உணவையும் சாப்பிடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் ORS பாதுகாப்பாகவும் விரைவாகவும் செயல்படுகிறது.

ALSO READ: டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ORS ஐ எப்படி பயன்படுத்தலாம்..? எப்படி பயன்படுத்தக்கூடாது..?

  • ORS பாக்கெட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • ORS கரைசல்களை மிக்ஸ் செய்வதற்கு முன் உங்கள் கைகளை சோப்பால் நன்கு கழுவுங்கள்.
  • ORS கரைசலில் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்த வேண்டாம்.
  • எப்போதும் ORS-ஐ வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும்.
  • ORS கரைசலில் தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும், ஜூஸ்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை சேர்க்கக்கூடாது.
  • கரைசலை 24 மணி நேரத்திற்கு மேல் சேமித்து குடிக்கக்கூடாது.