Health Tips: திடீரென எடை அதிகரிப்பு.. ஆரோக்கியமற்ற உணவு முறை மட்டுமே காரணமா?
Obesity Reasons: ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்ளல் உடல் பருமனுக்கு ஒரு காரணியாகக் கருதப்பட்டாலும், அவை மட்டுமே காரணம் அல்ல. மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் உடல் பருமன் அதிகரிக்கக்கூடும். நீண்ட காலமாக உணவின் மூலம் உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்வது உடல் பருமனுக்கு நேரடி காரணமாகும்.

உடல் எடை அதிகரிப்பு
இன்றைய நவீன காலத்தில் எல்லா வயதினரும் உடல் பருமன் (Obesity) அல்லது அதிக எடை பிரச்சனையை சந்திக்கின்றனர். இப்படியாக உடல் பருமன் அதிகரிக்கும்போது பல நோய்கள் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. எனவே, மக்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதன்படி, உணவைக் குறைப்பது முதல் அதிகப்படியான உடற்பயிற்சி (Exercise) வரை மேற்கொள்கிறார்கள். உண்மையில் இதனால் உடல் எடை குறையுமா என்பதை தெரிந்து கொள்வோம். நாம் அனைவரும் நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை மேம்படுத்தினால், உடல் பருமன் பிரச்சனையைத் தடுக்கலாம். மக்கள் பெரும்பாலும் உண்மை என்று நம்பும் சில தொடர்புடைய வதந்திகளைப் பற்றியும் அறிவது முக்கியம்.
ALSO READ: பெண்களுக்கு தைராய்டு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து.. இதன் அறிகுறிகள் என்ன?
உடல் பருமன் ஆரோக்கியமற்ற உணவால் மட்டுமே ஏற்படுமா?
ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்ளல் உடல் பருமனுக்கு ஒரு காரணியாகக் கருதப்பட்டாலும், அவை மட்டுமே காரணம் அல்ல. மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் உடல் பருமன் அதிகரிக்கக்கூடும். மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் போன்ற சாதனங்கள் முன், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் பருமன் அபாயத்தையும் அதிகரிக்க செய்வதாக ஆய்வுகள் காட்டுகின்றனர்.
எடையை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதுமானதா..?
நீண்ட காலமாக உணவின் மூலம் உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்வது உடல் பருமனுக்கு நேரடி காரணமாகும். எனவே, இதைக் குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டின் சீரான அளவில் கவனம் செலுத்துவது முக்கியம். எனவே, குறைவாக சாப்பிடுவது அல்லது உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைப்பதற்கான வழி அல்ல. ஆரோக்கியமான உணவை மிதமாக சாப்பிடுவதும், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதும் முக்கியம்.
உடல் எடையை பிரச்சனையால் சர்க்கரை நோய் வருமா?
உடல் பருமனுக்கும் சர்க்கரை நோய்க்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. ஆனால், இது நேரடியாக சர்க்கரை நோயை ஏற்படுத்தாது. உடல் பருமன் வகை 2 சர்க்கரை நோய்க்கான ஆபத்து காரணியாகும், ஆனால் உடல் பருமன் உள்ள அனைவருக்கும் வகை 2 சர்க்கரை நோய் வராது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் இரண்டின் அபாயத்தையும் குறைக்கும்.
ALSO READ: உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த தவறுகளா? உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்..!
பாரம்பரியமாக உடல் எடை பிரச்சனை ஏற்படுமா..?
குடும்ப பின்னணியை அடிப்படையாக கொண்டு உடல் பருமன் பிரச்சனையை கொண்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன்படி, உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடல் பருமன் அபாயங்களைக் குறைப்பதில் குறிப்பாக உதவியாக இருக்கும்.