Vitamin D: வெறும் வயிற்றில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்.. இது பலன் தருமா..? விரிவான பார்வை!

Vitamin D Supplements: காலை நேரம் உறிஞ்சுதலுக்கு சிறந்த நேரம். மேலும், வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எப்போதும் உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இந்த சப்ளிமெண்ட்டை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நன்மை பயக்காது என்பதை அறிய வேண்டும்.

Vitamin D: வெறும் வயிற்றில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்.. இது பலன் தருமா..? விரிவான பார்வை!

வைட்டமின் டி

Published: 

30 Oct 2025 13:30 PM

 IST

இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் வெயிலில் செல்வதை தவிர்ப்பதால், அவர்களின் உடலில் வைட்டமின் டி (vitamin D) குறைபாடு ஏற்படுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து நமக்கு கிடைக்கவில்லை. நமது உடலானது போதுமான அளவில் சூரிய ஒளியில் (Sun Light) படவில்லை என்றால், இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும். சூரிய ஒளி போதுமானதாக இல்லாதபோது, ​​நாம் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் வைட்டமின் வேலை செய்ய, அது குடலில் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கொண்டு செல்லப்பட்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களால் அதன் செயலில் உள்ள வடிவமாக மாற்றப்பட வேண்டும். இருப்பினும் சிலர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தவகையில், இது சரியானதா..? இதை எந்த வேளையில் போடுவது ஆரோக்கியமானது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காலையில் வெறும் வயிற்றில் பிரெட் சாப்பிடும் பழக்கம் இருக்கா? காத்திருக்கும் ஆபத்து!

வைட்டமின் டி சப்ளிமெண்ட் ஏன் அவசியம்?

வைட்டமின் டி மற்ற வைட்டமின்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் இது ஒரு ஹார்மோனாகக் கருதப்படுகிறது.சருமம் சூரிய ஒளியில் வெளிப்படும் போது உற்பத்தி செய்யப்படுகிறது. போதுமான வைட்டமின் டி ஆரோக்கியத்திற்கு அவசியம். ஏனெனில் இது நோயெதிர்ப்பு செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம், புற்றுநோய் தடுப்பு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளில் பங்கு வகிக்கிறது. இருப்பினும், வைட்டமின் டி குறைந்த எண்ணிக்கையிலான உணவுகளில் காணப்படுகிறது. அதன்படி, உங்களுக்கு தேவையான சூரிய ஒளியைப் பெறாவிட்டால் உடலின் வைட்டமின் டி தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகிவிடும்.

எந்த நேரத்தில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்து கொள்ளலாம்..?

காலையிலோ அல்லது மதியம் வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. காலை நேரம் உறிஞ்சுதலுக்கு சிறந்த நேரம். மேலும், வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எப்போதும் உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இந்த சப்ளிமெண்ட்டை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நன்மை பயக்காது. விரிவாக சொல்ல வேண்டுமென்றால், வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். அதாவது இது தண்ணீரில் கரையாது மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் இணைக்கப்படும்போது இரத்தத்தில் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது. இந்த காரணத்திற்காக, உறிஞ்சுதலை அதிகரிக்க உணவுடன் வைட்டமின் டி எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ALSO READ: வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் என்ன..? பிரபல மருத்துவர் விளக்கம்!

ஆரோக்கியமான காலை உணவோடு வைட்டமின் டி எடுத்துக்கொள்வதை ஒரு பழக்கமாக்குவது நல்லது. ஒரு மாத்திரைப் பெட்டியைப் பயன்படுத்துவது, அலாரம் அமைப்பது அல்லது உங்கள் சப்ளிமெண்ட்களை டைனிங் டேபிளுக்கு அருகில் வைத்திருப்பது ஆகியவை வைட்டமின் டி எடுக்க உங்களை நினைவூட்டுவதற்கான எளிய வழிகள் ஆகும்.