Fertility Problems: உங்கள் உணவு பட்டியலில் இந்த உணவுகள் போதும்.. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்!
Foods to Increase Sperm Count: மருந்துகளை நாடுவதற்கு முன்பு உங்கள் உணவு முறை மற்றும் தினசரி வழக்கத்தை மேம்படுத்துவது கருவுறுதலை கணிசமாக மேம்படுத்தும். சரியான உணவுமுறை பின்பற்றுவது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.

விந்தணு எண்ணிக்கை
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், பலரும் மலட்டுத்தன்மை (Fertility Problems) பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தப் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல, ஏராளமான ஆண்களும் குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் மோசமான விந்தணு தரத்தால் (Sperm Count) ஏற்படுகிறது. இதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. பலர் தங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இது சில நேரங்களில் பெரியளவில் பலனை தராமல் போகலாம்.
மருந்துகளை நாடுவதற்கு முன்பு உங்கள் உணவு முறை மற்றும் தினசரி வழக்கத்தை மேம்படுத்துவது கருவுறுதலை கணிசமாக மேம்படுத்தும். சரியான உணவுமுறை ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே, உங்கள் உணவு பட்டியலில் எந்த உணவுகளைச் சேர்ப்பது கருவுறுதல் பிரச்சினைகளைத் தடுக்கும் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
விந்தணுக்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகபடியான மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். அதிகப்படியான வெப்பம், இறுக்கமான ஆடை, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவை விந்தணுக்களை நேரடியாக பாதிக்கின்றன. உடல் பருமன், ஹார்மோன் பிரச்சினைகள் மற்றும் சில மருந்துகள் விந்தணு உற்பத்தியையும் பாதிக்கலாம். உங்கள் தினசரி உணவில் சில உணவுகளைச் சேர்ப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும், சரியான ஊட்டச்சத்து உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமன் செய்து, கருவுறுதலை மேம்படுத்துகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்:
பச்சை இலை காய்கறிகள்
பசலைக் கீரை, வெந்தயம் மற்றும் பிற பச்சை காய்கறிகளில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது உங்கள் உணவு பட்டியலில் இடம் பெறும்போது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும்.
ALSO READ: பிறந்து 6 மாதமாகியும் குழந்தை தவழவில்லையா..? மருத்துவர் சுபாஷ் சூப்பர் டிப்ஸ்!
நட்ஸ் – ட்ரை ப்ரூட்ஸ்
பாதாம், அக்ரூட் பருப்புகள், திராட்சை மற்றும் அத்திப்பழம் போன்ற உலர்ந்த பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும்.
புரதம் நிறைந்த உணவுகள்
முட்டை, பால், பருப்பு வகைகள் மற்றும் சீஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் விந்தணுக்களின் தரத்திற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. இது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
மாதுளை, வாழைப்பழம், கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை விந்தணுக்களை சேதத்திலிருந்து பாதுகாத்து அவற்றின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகின்றன.
ALSO READ: இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஞாபக மறதி? இதற்கு மொபைல் போன் காரணமா?
மேலும் சில விஷயங்கள்..
அதிகப்படியான காஃபின், ஆல்கஹால், துரித உணவு, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் புகைபிடித்தல் ஆகியவை கருவுறுதலை பாதிக்கின்றன. இந்த உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உடலில் நச்சுக்களை அதிகரித்து ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் இரண்டையும் பாதிக்கின்றன.