Childrens Health: குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளா..? எச்சரிக்கை! நீர்ச்சத்து குறைபாடாக இருக்கலாம்!

Children Dehydration: குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஆபத்தானது. ஏனெனில் குழந்தைகளினால் தண்ணீர் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது. அதன்படி, உடலில் திரவங்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, ​​இரத்தம் கெட்டியாகி, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறுப்புகளை சரியாக சென்றடையாது. இது குழந்தையை பலவீனப்படுத்தும். 

Childrens Health: குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளா..? எச்சரிக்கை! நீர்ச்சத்து குறைபாடாக இருக்கலாம்!

குழந்தை ஆரோக்கியம்

Published: 

12 Nov 2025 19:58 PM

 IST

நீரிழப்பு (dehydration) என்பது உடலில் நீர் மற்றும் அத்தியாவசிய திரவங்கள் இல்லாததைக் குறிக்கிறது. இந்த பிரச்சனை பொதுவாக வெயில் காலத்தில் பெரியவர்களுக்கு ஏற்படும். அதேநேரத்தில், 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் (Childrens) எல்லா பருவ காலங்களிலும் இந்த பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார்கள். இளம் குழந்தைகள் விரைவாக திரவ இழப்பு பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதனால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமாக உள்ளது. இது குழந்தைக்கு நீரிழப்பு பிரச்சனையை சந்திக்க செய்கிறது. அடிக்கடி வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிக காய்ச்சல் அல்லது போதுமான பால் மற்றும் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணத்தினால் குழந்தைக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்படுகிறது. வெப்பமான வானிலை, ஏசியின் குளிர்ந்த காற்று அல்லது தொற்று பிரச்சனைகளும் குழந்தைகளுக்கு நீரிழப்பை ஏற்படுத்தும். இவற்றை சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்த நிலை மோசமடையக்கூடும். எனவே சிறு குழந்தைகளில் நீரிழப்பு பிரச்சினையை புறக்கணிக்கக்கூடாது.

ALSO READ: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா..? டாக்டர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!

நீர்ச்சத்து குறைபாடு ஏன் ஆபத்தானது..?

குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஆபத்தானது. ஏனெனில் குழந்தைகளினால் தண்ணீர் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது. அதன்படி, உடலில் திரவங்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, ​​இரத்தம் கெட்டியாகி, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறுப்புகளை சரியாக சென்றடையாது. இது குழந்தையை பலவீனப்படுத்தும்.

இந்த பிரச்சனை தீவிரமடையும்போது நீரிழப்பு சிறுநீரகங்களைப் பாதித்து, சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைக்கும். தொடர்ந்து நீரிழப்பு குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கலாம். மேலும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும். எனவே, குழந்தைகளில் நீரிழப்பு குறித்து தீவிரமாக எடுத்துக்கொள்வதும், உடனடியாக மருத்துவரைத் தொடர்புகொள்வதும் மிகவும் முக்கியம்.

நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்ன ?

  • ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நீர்ச்சத்து குறைபாட்டின் பல அறிகுறிகள் உள்ளன. மிகவும் பொதுவான அறிகுறிகளில் அடிக்கடி அழுவது மற்றும் எரிச்சல் குழந்தையின் வாய் மற்றும் உதடுகளும் வறண்டு போகும். மேலும், அழும்போது கண்ணீர் வராது, டயப்பர் நீண்ட நேரம் பயன்படுத்தியும் வறண்டதாகவே இருக்கும். கூடுதலாக, குழந்தையின் தோல் தளர்வாகவோ அல்லது வறண்டதாகவோ தோன்றலாம்.
  • குழந்தை மீண்டும் மீண்டும் பால் குடிக்க மறுத்தால், மிகுந்த பலவீனம் தென்பட்டால் அல்லது சோம்பலாக உணர்ந்தால், அது கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் நீர்ச்சத்து குறைவதால் குழந்தைக்கு அதிக காய்ச்சல் அல்லது தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானது. இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொண்டு குழந்தைக்கு போதுமான திரவங்களை கொடுக்க முயற்சி செய்யவும்.

ALSO READ: வானிலை மாறும்போது குழந்தைகளுக்கு ஏன் டக்கென்று காய்ச்சல் வருகிறது..? காரணம் இதோ!

எப்படி பாதுகாப்பது..?

  • குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுங்கள்.
  • கோடை காலத்தில் உங்கள் குழந்தைக்கு லேசான ஆடைகளை உடுத்துங்கள்.
  • வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
  • குழந்தைக்கு சுத்தமான மற்றும் வசதியான சூழலை வழங்குங்கள்.
  • குழந்தை ஏதேனும் பலவீனம் அல்லது சோம்பலைக் காட்டினால், உடனடியாக ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.