Health Tips: செரிமான பிரச்சனை.. அதீத வயிற்றுவலி.. இவை புற்றுநோய்க்கான அறிகுறியா?

Stomach Cancer: வயிற்றுப் புற்றுநோய்க்கு பல அறிகுறிகள் உள்ளன. தொடர்ச்சியான வயிற்று வலி மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப் புற்றுநோய், உணவு செரிமானம் ஆவதைத் தடுக்கிறது. இது பசியின்மை மற்றும் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

Health Tips: செரிமான பிரச்சனை.. அதீத வயிற்றுவலி.. இவை புற்றுநோய்க்கான அறிகுறியா?

வயிற்று புற்றுநோய்

Published: 

22 Mar 2026 18:58 PM

 IST

தற்காலத்தில் வயிற்றுப் பிரச்சனைகள் (Stomach Pain) சாதாரணமாகிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பலர் வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். வயிற்றுப் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது என்பதை தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் இரைப்பைப் புற்றுநோய் அல்லது வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer) என்றும் அழைக்கப்படுகிறது. உலகளவில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை. சில நாடுகளில் வயிற்றுப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படுவதில்லை.

ALSO READ: உடல் கொழுப்பு எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும்? நிபுணர்கள் விளக்கம்

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்:

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் இந்த நோயைப் புறக்கணிக்கின்றனர் என்று கூறுகிறது. அதாவது, அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரும், இரைப்பை-குடல் புற்றுநோய் வல்லுநருமான பால் மான்ஸ்ஃபீல்ட் கூறுகிறார். அதில், “ உண்மையில், பெரும்பாலான வயிற்று புற்றுநோய்கள் முற்றிய நிலை அடையும் வரை எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மேலும், இவை அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் போன்றவையாக இருக்கலாம். எனவே, அதிகமாக சாப்பிடுவது, தவறான உணவை உண்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால்தான் இது ஏற்படுகிறது என்று நினைத்து, வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளை புறக்கணிப்பது எளிது.

இருப்பினும், உடலில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும், இது தொடர்ந்து நீடித்தால், பொதுவாக பரிசோதிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இது 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்வது நல்லது” என்றார்.

செரிமானத்தில் தாமதம்:

வயிற்றுப் புற்றுநோய்க்கு பல அறிகுறிகள் உள்ளன. தொடர்ச்சியான வயிற்று வலி மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப் புற்றுநோய், உணவு செரிமானம் ஆவதைத் தடுக்கிறது. இது பசியின்மை மற்றும் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. திடீர் எடை இழப்பு புற்றுநோயின் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதெல்லாம், பொரித்த, வறுத்த அல்லது இனிப்பு உணவுகளைச் சாப்பிட்ட பிறகு அஜீரணம் ஏற்படுவது சகஜமாகிவிட்டது.

ஆனால், வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்த பிறகோ அல்லது மருந்துகளை உட்கொண்ட பிறகோ இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், அவை ஒரு தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

ALSO READ: சுத்தமான குடலே ஆரோக்கியம்.. ஹெல்த்தியாக வைத்திருக்க டாக்டர் சொல்லும் அறிவுரை!

வயிற்றுப் புற்றுநோயின் மற்ற அறிகுறிகளில், காரணமின்றி உடல் எடை குறைதல், விரைவில் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும். ஆனால், இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

இரத்த வாந்தி:

சிறிதளவு இரத்தம் வந்தாலும் அது கடுமையானதாகக் கருதப்படுகிறது.

இரத்தத்துடன் கூடிய மலம்:

இது பெரும்பாலும் கருப்பாகவோ அல்லது தார் போன்றோ, எஃகு அல்லது உலோக வாசனையுடனோ இருப்பதாக விவரிக்கப்படுகிறது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..